++ 5 ஆண்டு சட்டப் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
தமிழகத்தில் அரசு சட்டக் கல்லூரி களில் 5
ஆண்டு இளநிலை சட்டப் படிப்பில் (பிஏ.எல்எல்பி) நடப்பாண் டில் சேர 7,690 பேர் விண்ணப்பித்தனர்.
அவர்களில் 7,371 பேரின் விண்ணப் பங்கள் ஏற்கப்பட்டு தரவரிசை பட்டி யல் ஜூலை 2-ம் தேதி வெளியிடப்பட் டது. இதைத்தொடர்ந்து, கல்லூரியைதேர்வு செய்வதற்கான கலந்தாய்வு ஜூலை 8 முதல் 11-ம் தேதி வரை சென்னையில் தமிழ்நாடு டாக்டர் சட்டப் பல்கலைக்கழகத்தில் கலந் தாய்வு நேற்று தொடங்கியது. முதல் நாளன்று பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது.
தரவரிசை பட்டியலில் முதலிடத் தைப் பிடித்தகோவில்பட்டி மாணவி சுஷ்மிதா (கட் ஆஃப் மார்க் 99.5), 2-ம் இடம் பெற்ற கம்பம் மாணவி ஜெயதுர்கா (99.25) ஆகியோர் மதுரை அரசு சட்டக் கல்லூரியையும், 3-ம் இடத்தைப் பிடித்த கோவை சூலூர் மாணவி மல்லிகா கோவை அரசு சட்டக் கல்லூரியையும் தேர்வு செய்த னர். அவர்கள் மூவருக்கும் சட்டக் கல்வி இயக்குநர் என்.கே.சந்தோஷ் குமார் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சட்டப் பல்கலைக் கழகப் பதிவாளர் (பொறுப்பு) ஆர்.விஜயலட்சுமி. சட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை தலைவர் டி.சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். இன்று எஸ்டி மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...