.மாநிலம் முழுவதும், பள்ளிகளில் படிக்கும், 1.50 கோடி மாணவர், 5.5 லட்சம் ஆசிரியர் விபரங்கள், கல்வித் தகவல் மேலாண்மை முறைமை எனும், 'எமிஸ்' இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு உள்ளன; குளறுபடிகள் கண்டறியப்பட்டுள்ளன.பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன், முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ், சில பள்ளிகளில் ஆய்வு செய்ததில், 'எமிஸ்' இணையதளத்தில், மாணவர் விபரங்கள், 'அப்டேட்' செய்யப்படாமல் இருப்பது, கண்டறியப்பட்டுள்ளது. சேர்க்கை விபரங்கள் வேறுபட்டுள்ளன.இதற்கு காரணமான, அலுவலர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள, முதன்மைச் செயலர் உத்தரவிட்டுள்ளார். மாணவர் சேர்க்கை எண்ணிக்கை, 'எமிஸ்' தளத்தில் உள்ள மாணவர் சேர்க்கை விபரத்தை, முதன்மைக் கல்வி அலுவலர்கள், வகுப்பு வாரியாக, வரும், 25ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது