NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் மாநில ஆலோசனை கூட்டம்

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரியும்  மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் மாநில சங்கம் தமிழ் நாடு சார்பில் ஆலோசனை கூட்டம் 



சேலம் மாவட்ட தலைவர் திரு.வெங்கடேசன் துவக்கி வைத்தார். இதில் 18 மாவட்டத்தில் இருந்து பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சங்க நடவடிக்கை குறித்து பேசினர்.

மாநில தலைவர் திருச்சி சேதுராமன் தலைமை வகித்து சங்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பேசினார். மாநில பொது செயலாளர் விழுப்புரம் பாபு முன்னிலை வகித்து மாநில மாவட்ட ஒருங்கிணைப்பு மற்றும் கோரிக்கை நிறைவேற்றும் வகையில் செயல்பாடுகள் குறித்து விரிவாக பேசினார். மாநில பொருளாளர் சென்னை மாலினி சங்க வளர்ச்சி குறித்து பேசினார்.

கலந்து கொண்ட 18 மாவட்டங்களின் விபரம்:-

1.அரியலூர்
2.சென்னை
3.கடலூர்
4.கிருஷ்ணகிரி
5.சேலம்
6.திருவண்ணாமலை
7.திருவாரூர்
8.தஞ்சாவூர்
9.திருச்சி
10.கோவை
11.ஈரோடு
12.வேலூர்
13.காஞ்சிபுரம்
14.விழுப்புரம்
15.கரூர்
16.விருதுநகர்
17.நாமக்கல்
18.திருப்பூர்

அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட சங்க கட்டமைப்பினை மேலும் வலுப்படுத்தும்  வகையில் நடவடிக்கை மேற்கொள்ள கூறப்பட்டது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட 10 தீர்மானங்கள் விரைவில் நிறைவேற்றும் பொருட்டு அனைத்து  கல்வித்துறை உயர் அதிகாரிகள் மற்றும் தமிழக அரசிற்கும் அனுப்பப்பட்டது

*10 தீர்மானங்கள்:-*

1.பணி நிரந்தரம் அல்லது சம வேலைக்கு சம ஊதியம் பெற்றிட சட்டரீதியான அணுகுமுறை கையாளுதல்.

2.கல்வி துறை அமைச்சர் ஈரோடு கோபிசெட்டிப் பாளையத்தில் கவன ஈர்ப்பு தொடர் போராட்டம் செய்திடல்

3.ஊதிய உயர்வு , இ.பி.எப் பிடித்தம் , போன்ற அடிப்படை பணிச்சலுகை பெற மாநில திட்ட இயக்குநரை தொடர்ந்து வலியுறுத்தல்.

4.மாவட்டத்திற்கு மாவட்டம் மாறுபட்ட நிர்வாக முறைகளை ஒழுங்குபடுத்திட வேண்டும்.

5.சனிக்கிழமை வார விடுமுறையாக பள்ளி மற்றும் பி.ஆர்.சி அலுவலகம் கடைப்பிடிப்பதால் சிறப்பு பயிற்றுநர்களுக்கு வருங்காலங்களில் வாரவிடுமுறையாக அறிவித்திட கோரி ஜீலை 2019 முதல்  சனிக்கிழமை வேலை புறக்கணிப்பு செய்திடல்.

6.மாற்றுத்திறன் சிறப்பு பயிற்றுநர்களுக்கு உடனடியாக ஊர்திப்படி ரூ.1000/- வழங்கிட வேண்டும்.

7.பிரதிமாதம் 5ஆம் தேதிக்குள் SMC வங்கி கணக்கில் தவிர்த்து சிறப்பு பயிற்றுநர்கள் வங்கி கணக்கில் ஊதியம் கிடைத்திட ஆவண செய்திட வேண்டும்.

8. இக்கல்வியாண்டு 2019-20ல் ஊதிய உயர்வு அளிக்கப்பட வில்லையெனில் நடைப்பெற உள்ள மருத்துவ முகாமினை அனைத்து மாவட்டமும் புறக்கணிக்கப் படும்.

9.EMIS வலைதளத்தில் அனைத்து கல்வித்துறை பணியாளர்கள் விபரம் பதிவேற்றம் செய்யப்படும்போது தற்சமயத்தில் சிறப்பு பயிற்றுநர்களையும் புறக்கணிப்பு செய்யாமல்  பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.

10.விபத்து இழப்பீடு , பணிக்காலத்தில் இறக்கும் சமயத்தில் அக்குடும்பத்திற்கு இழப்பீடு , மருத்துவ காப்பீட்டு ஆகியவற்றை நிறைவேற்ற வேண்டும்.

மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணகிரி அருண்குமார், கடலூர் கணபதி , மாநில துணைதலைவர்கள் விருதுநகர் காணிராஜா, ஈரோடு ராஜேஷ் மாநில துணை செயலாளர்கள் சென்னை டோன் போஸ்கோ, வேலூர் சிவராமன்,கோவை மனோஜ்மார்டின் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டு கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

சேலம் மாவட்ட மூத்த சிறப்பு பயிற்றுநர் திரு.மணிவண்ணன் நன்றியுரை வழங்கினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive