காலை பள்ளிக்கு வந்தவுடன், செல்ஃபி எடுத்து அனுப்ப வேண்டும் என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அரசு ஊழியர்களை ஒழுங்கு படுத்தும் விதமாக பல்வேறு திட்டங்களை, உத்தர பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் மேற்கொண்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்பு, உடல் தகுதி பெறாத 50 வயது நிரம்பிய காவலர்களை விருப்ப ஓய்வில் அனுப்பினார்.

இதனைத் தொடர்ந்து தற்போது, ஆசிரியர்கள் பள்ளிக்கு தாமதமாக வருவது, பணிக்கு வராமலே இருப்பது போன்ற முறைகேடுகளை தடுக்க, தினமும் காலை 8 மணிக்கு, தங்கள் வகுப்பறையின் முன் நின்று செல்ஃபி எடுத்து அதனை 'பேசிக் சிஷா' இணையத்தளத்திற்கு, குறிப்பிட்ட நேரத்திற்குள் அனுப்ப வேண்டும் என அறிவித்துள்ளார்

மேலும் இவ்வாறு ஆசிரியர்கள் செல்ஃபி எடுத்து அனுப்பவில்லை என்றால், ஒரு நாள் ஊதியம் வழங்கப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பல ஆசிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. எனினும் இந்த அறிவிப்பு, பாராட்டத்தக்க ஒன்று என யோகி ஆதித்யநாத்தின் ஆதரவாளர்கள் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments