புதுச்சேரியில் உள்ள ஸ்ரீ போதி அகாடமி ஆஃப் ஹயர் எஜுகேஷன் உட்பட நாடு முழுவதும் 23 பல்கலைக்கழகங்கள் உரிய அங்கீகாரமின்றி செயல்படுவதாக பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.
23 சுயநிதி பல்கலைக்கழகங்களின் பட்டியலை நேற்று வெளியிட்ட பல்கலைக்கழக் மானியக் குழு அவை விதிகளை மீறி செயல்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் 8 பல்கலைக்கழகங்களும் டெல்லியில் 7 பல்கலைக்கழங்களும் செயல்பட்டு வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது. மேற்குவங்கம், ஒடிசாவில் தலா 2 பல்கலைக்கழகங்களும், புதுச்சேரியில் உள்ள ஸ்ரீ போதி அகாடமி ஆஃப் ஹயர் எஜுகேஷன் உட்பட கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிராவில் தலா ஒரு பல்கலைக்கழகமும் உரிய அங்கீகாரமின்றி செயல்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் தமிழகத்தில் இருந்து ஒரு பல்கலைக்கழகம் கூட இடம்பெறவில்லை.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...