புதுக்கோட்டை,ஜீலை.18
: புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் சார்பில் 2 முதல் 5
ஆம் வகுப்பு வரை எடுக்கும் ஆசிரியர்களுக்கான புதிய பாடத் திட்டம் குறித்த
மாவட்ட அளவிலான பயிற்சி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி பயிற்சி அரங்கில்
மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவுப்படியும்,புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்
கல்வி அலுவலர் செ.சாந்தி( பொறுப்பு) வழிகாட்டுதலின் படியும் நடைபெற்று
வருகிறது.
தமிழ்,ஆங்கிலம்,கணக்கு,சமூக
அறிவியல் என நான்கு பாடங்களுக்கும் புதிய பாடத்திட்டம் பற்றி 17.7.19
முதல் 20.7.19 வரை நான்கு நாட்கள் பயிற்சி நடைபெற்று
வருகிறது.இப்பயிற்சியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 109 ஆசிரியர்
பயிற்றுநர்கள் மற்றும் 6 ஆசிரியர்கள் என மொத்தம் 115 பேர் கலந்து
கொண்டுள்ளனர்.
இப்பயிற்சியானது
வரும் 21 ஆம் தேதி முதல் 4 கட்டங்களாக அனைத்து தொடக்க நிலை
ஆசிரியர்களுக்கும் வட்டார அளவில் நடைபெற உள்ளது.இதில் 3721 ஆசிரியர்கள்
பயிற்சி பெற உள்ளனர்.
முன்னதாக
புதன்கிழமை நடைபெற்ற பயிற்சி வகுப்பினை மாவட்டத்திட்ட அலுவலர்
இரவிச்சந்திரன் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.புள்ளியியல் அலுவலர்
பத்மநாதன் வாழ்த்துரை வழங்கினார்.மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளர்
மெ.ரெகுநாததுரை அறிமுக உரை நிகழ்த்தினார்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமன்
நன்றி கூறினார்.
பயிற்சியின் மாநிலக் கருத்தாளர்களாக ஆசிரியர் பயிற்றுநர் பரிசுத்தம்,அருண்குமார்,ஆசிரி யர்கள் பிரகாஷ் மற்றும் மாணிக்கம் ஆகியோர் செயல்பட்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...