பள்ளி பேருந்துகள் ஒழுங்குமுறை
விதிப்படி, பாதுகாப்புக் குழு அமைக்காமல் கடமை தவறிய, விழுப்புரம் முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், தொடக்கக் கல்வி அலுவலர் ஆகியோருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.

கடந்த 2017 -ஆம் ஆண்டு, திண்டிவனத்தில் பள்ளி வாகனம் பின்னால் வந்தபோது அதன் சக்கரத்தில் சிக்கி குழந்தை யுவஸ்ரீ உயிரிழந்தது. இந்த விபத்து தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரியும், ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரியும் தாய் அஞ்சலி தேவி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில், திண்டிவனத்தில் இயங்கிவரும் தனியார் பள்ளி தாளாளருக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்ட நீதிமன்றம், அபராதத் தொகையை குழந்தையின் தாய்க்கு வழங்கவும் ஆணையிட்டுள்ளது.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Categories

Blog Archive

Total Pageviews

Popular Posts

Recent Comments