Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஜல் சக்தி அபியான் திட்டத்தில் நீர் நிலைகளைப் பராமரிப்பது மற்றும் தண்ணீர் சேமிப்பு,குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த மாணவ,மாணவிகளுக்கு விழிப்புணர்வு செய்யவேண்டும் CEO புதுக்கோட்டை

ஜல் சக்தி அபியான் திட்டத்தில் நீர் நிலைகளைப் பராமரிப்பது மற்றும் தண்ணீர் சேமிப்பு,குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த மாணவ,மாணவிகளுக்கு விழிப்புணர்வு செய்யவேண்டும்.தலைமையாசிரியர்கள் கூட்டத்தில் முதன்மைக்கல்வி அலுவலர் செ.சாந்தி பேச்சு.     புதுக்கோட்டை,ஜூலை,13-              புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளின் ஆசிரியர்களையும் ளுக்கான கூட்டம் புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள தேர்வுக்கூட அரங்கில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு திருச்சி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரும்,புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பொறுப்பு வகிப்பவருமான செ.சாந்தி தலைமை தாங்கி கூட்டத்தினை தொடங்கி வைத்து பேசும்போது கூறியதாவது, மாணவர்களின் நலனுக்காக மத்திய,மாநில அரசுகள் எண்ணற்ற நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.2019-2020 ஆம் ஆண்டிற்கான ஊரகத்திறனாய்வுத்தேர்விற்கு நாளை மறுநாள்15-ந்தேதி(திங்கட்கிழமை) முதல் வருகிற 25-ந்தேதி (வியாழக்கிழமை) வரை விண்ணப்பிக்கலாம்.பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ 1லட்சத்துக்குள்ளாக இருக்கும் மாணவ,மாணவிகள் மட்டும் திறனாய்வுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.இதில் ஒவ்வொரு பள்ளித்தலைமையாசிரியரும் தனிக்கவனம் செலுத்தி தகுதியுள்ள அனைத்து மாணவ,மாணவிகளையும் பள்ளிகள் வாயிலாக விண்ணப்பிக்கச்செய்யவேண்டும்.நாளை மறுநாள் 15ந்தேதி(திங்கட்கிழமை) கல்வி வளர்ச்சி நாளை சிறப்பாக கொண்டாடவேண்டும்.ஆசிரியர்கள் பயோமெட்ரிக் தொட்டுனர் கருவி வாயிலாக காலை,மாலை நேரங்களில் வருகைப்பதிவு செய்வதையும்,மாணவ,மாணவிகளின் வருகைப்பதிவு செயலியில்   பதிவேற்றம் செய்யப்படுவதையும், கல்வித்தகவல் மேலாண்மை முறைமையில்(எமிஸில்)  அனைத்து தகவல்களும் சரியான முறையில்  பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதையும் , சத்துணவு சாப்பிடும்  மாணவ,மாணவிகளின் விபரங்களை குறுந்தகவல் அனுப்புவதையும் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் உறுதி செய்யவேண்டும்.புதுக்கோட்டை மாவட்டம்,அரசுப்பொதுத்தேர்வு தேர்ச்சி விழுக்காட்டில் சிறப்பானதொரு இடத்தைப்பெறும் நோக்கில் மாற்றுப்பணியில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கும் ,அந்தந்த பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் தலைமையாசிரியர்கள் சிறப்பான வழிகாட்டலைச்செய்யவேண்டும்.கல்வித்தகவல் மேலாண்மை முறைமையில்(எமிஸ்) உள்ள மாணவ,மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பாடப்புத்தகங்கள் பெறப்பட்ட விபரம்,மீதம் இருப்பு விபரம் ஆகியவற்றை ஒவ்வொரு பள்ளித்தலைமையாசிரியரும் சம்பந்தப்பட்ட மாவட்டக்கல்வி அலுவலகங்களுக்கு தெரியப்படுத்தவேண்டும்.ஜல் சக்தி அபியான் திட்டத்தில் நீர் நிலைகளைப் பராமரிப்பது மற்றும் தண்ணீர் சேமிப்பு,குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துவது பற்றிய நீர் மேலாண்மை குறித்து மாணவ,மாணவிகளுக்கு விழிப்புணர்வு செய்யவேண்டும்.குறிப்பாக மாணவ,மாணவிகளுக்கு மரம் வளர்ப்புக்கு ஊக்குவிப்பது போன்று நீர் மேலாண்மை குறித்து கட்டுரைப்போட்டி நடத்தியும், மாணவ,மாணவிகள் அவரவர் வீடுகளில் மேற்கொள்ளப்படும் நீர் மேலாண்மைக்கும்,சுற்றுச்சூழல் பராமரிப்பிற்கும் ,விதைப்பந்து மேற்கொள்வதற்கும் மாணவ,மாணவிகளை ஊக்கப்படுத்தியும் வருங்கால சந்ததியினரை காக்க தலைமையாசிரியர்கள் உறுதுணையாக இருக்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.இக்கூட்டத்தில் மாவட்டக்கல்வி அலுவலர்கள்,முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள்,ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர்,பள்ளித்துணை ஆய்வாளர்கள்,பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்...




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive