NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Design School மாபெரும் ஓவியக் கண்காட்சி



பாரதியின் எண்ண தூரிகையின் வண்ணத் துளிகள் மாபெரும் ஓவியக் கண்காட்சி

திருச்சியில் ஜூலை 27, 28, 29 தேதிகளில் நடைபெறுகிறது

அனுமதி இலவசம் அனைவரும் வருக

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரை போல – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !
என்றபாரதியின் வைர வரிகளுக்கேற்ப

பாரதியின் எண்ண தூரிகையின் வண்ண துளிகள் தலைப்பில் மேஜிக்கல் எக்ஸ்பிரஷன்ஸ் ஓவியக் கண்காட்சியை டிசைன் ஓவியப் பள்ளி திருச்சி ரம்யாஸ் ஹோட்டல் செளபாக்யா குளிர் அரங்கில் ஜூலை 27, 28, 29 மூன்று நாட்கள் காலை 10-00 மணி முதல் இரவு 7-30 மணி வரை நடத்துகின்றது

கண்காட்சியில் பத்திரிக்கை ஓவியர் ஷாம் ,விஜய் தொலைக்காட்சி புகழ் திவாகர் உள்ளிட்டோர் துவக்க விழாவில் பங்கேற்கிறார்கள்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ,கவிஞர் நந்தலாலா, திரைப்பட கவிஞர் சினேகன் உள்ளிட்டோர் பரிசளிப்பு விழாவில் பங்கேற்கிறார்கள்.

ஓவியங்களானது இயற்கையானவையாகவோ, ஒரு பொருளைப்போல வரையப்பட்டவையாகவோ, நிழற்படத்தை ஒத்தவையாகவோ, பண்பியல் (abstract) தன்மை கொண்டனவாகவோ ஓவிய பள்ளி மாணவர்கள் வரைந்துள்ளார்கள்

அதில் ஒரு கருத்தை விளக்கும் உள்ளடக்கம் கொண்டவையாக, குறியீட்டுத் தன்மை கொண்டனவாக, உணர்ச்சி பூர்வமானவையாக எண்ணக்கருக்களும், அழகூட்டல்களுடன் ஒவ்வொரு மாணவர்களும் நான்கு ஓவியங்கள் வரைந்துள்ளார்கள்

நான்கு ஓவியங்களில் பாரதியின் எண்ணத் தூரிகையின் வண்ணத் துளிகள் ஓவியக் கண்காட்சியில் ஞானப் பாடல்கள் ,தோத்திரப் பாடல்கள், புதிய ஆத்திச்சூடி, சான்றோர், சமூகம், தனிப்பாடல்கள், நீதி, காணி நிலம் வேண்டும், யாரையும் மதித்து வாழ், வேதம் புதுமை செய், பாப்பா பாட்டு, பெண்கள் விடுதலைக் கும்மி தலைப்பில் அச்சமில்லை, மஹாசக்திக்கு விண்ணப்பம், வையத் தலைமை கொள், ஓவியர் மணி, ரவிவர்மா, தொழில், கவிதைத் தலைவி, நிவேதிதா, போர்த்தொழில் பழகு, புதிய கோணங்கி, வருவதை மகிழ்ந்துண், உடலினை உறுதி செய், ஈகை திறன், ரேகையில் கனிகொள், தவத்தினை நிதம்புரி, காலம் அழியேல், ஞாயிறு வணக்கம், சேர்க்கை அழியேல் என்ற பொருள்களில் ஓவியம் வரைந்து காட்சி படுத்துகிறார்கள்.

பள்ளி மாணவர்கள்
நிறமிகளைக் கொண்டு தீட்டிப் பின் ஒருவகை நெய் அல்லது எண்ணெய் கொண்டு காயவைக்கும் எண்ணெய் வர்ணத்தை ஓவியத்தில் oil painting கையாண்டுள்ளார்கள்அவை ஓவியத்திற்கு மெருகூட்டவும் பளபளப்பாக்கவும் வெவ்வேறு வித விளைவுகளை ஏற்படுத்தவும், வெவ்வேறு நிறமிகளைப் பயன்படுத்தவும், ஒன்றிற்கும் மேற்பட்ட எண்ணெய்களை ஒரே ஓவியத்தில் ஓவியர்கள் பயன்படுத்தியுள்ளார்கள்.

வண்ண நிறமித் தூள்கள் மற்றும் ஒட்டும் பொருளாலான குச்சி வடிவிலான ஓவிய ஊடகத்தை பயன்படுத்தி எண்ணெய் வண்ணப்பூச்சுகள் உட்பட அனைத்து நிற கலை ஊடகங்களின் பூச்சுகளைப் போலவே ஓவியங்களில் பயன்படுத்தப்படும் நிறங்களை சமப்படுத்தவும், மங்கலான குறைந்த செறிவு பகுதிகளை காட்டவும் வண்ணக்கோல் (Pastel painting) பயன்படுத்தியும்
ஓவியத்தை காட்சி படுத்தியுள்ளனர்.

செயற்கை வண்ணக் கூழ்மமானது விரைவாக உலரக்கூடிய வண்ண நிறமிகளைக் கொண்ட கூழ்ம வடிவிலான வண்ணமாகும். தண்ணீர் கொண்டு நீர்க்கப்பட்டு செயற்கை வண்ணக் கூழ்மங்கள் (Acrylic painting) பயன்படுத்தப்பட்ட ஓவியமும் காட்சிப் படுத்தப்படுகிறது.

நீரைக் கரைப்பானாகக் பயன்படுத்தி வண்ணம் தீட்டப்படும் ஒருவகை வண்ண நிறமிகளடங்கிய ஊடகமாக்கி மிகவும் பாரம்பரியமாக Water Colour painting நீர் வர்ண ஓவியங்களை காட்சிப்படுத்துகிறார்கள்

சில நிறமிகள் மற்றும் சாயங்கள் போன்றவற்றாலான திரவம் கொண்டு ஒரு படிமம், எழுத்துவடிவம், வடிவமைப்பு என்பவற்றைத் தீட்டி மை ஓவியங்களை (Ink Painting) எழுதுகோல், தூரிகை, இறகு எழுதுகோல் கொண்டு செய்துள்ளனர்.

மேலும் பூச்சு ஓவியங்கள் (Enamel painting)
நீரில் கரையும் எண்ணெய் ஓவியங்கள் (Water miscible oil painting)
மெழுகு ஓவியங்கள்(wax painting) நவீன ஓவியங்கள் என பல்வேறு நுட்பங்களை மேற்கொண்டு 160 ஓவியங்களை 40 ஓவிய மாணவர்கள் காட்சிப்படுத்தியுள்ளார்கள். டிசைன் ஓவியப் பள்ளி தாளாளர் மதன் அதன் இயக்குனர் நஸ்ரத் பேகம் ஓவியக் கண்காட்சிக்கான ஏற்பாட்டினை செய்துள்ளார்கள்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive