காரைக்காலில் பள்ளிகளில் அமல் படுத்தப்பட்டுள்ள வாட்டர் பெல் திட்டத்தை
துணை கலெக்கடர் ஆதாஷ் ஆய்வு மேற்கொண்டார்.பள்ளி மாணவர்கள், குடிநீர் போதிய
அளவில் குடிக்காததால் சிறுநீரக தொற்று உள்ளிட்ட பல்வேறு நோய்களில்
பாதிக்கப்படுவதை தடுக்கும் பொருட்டு, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து
பள்ளிகளிலும், மாணவர்கள் தினசரி மூன்று வேளை குடிநீர் குடிக்கும் வகையில்
வாட்டர் பெல் திட்டத்தை செயல்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி காரைக்கால்
மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை
குடிநீர் குடிக்கும் வகையில் வாட்டர் பெல் திட்டம்
செயல்படுத்தப்பட்டுள்ளது.இத்திட்டம் செயல்படும் முறையை துணை கலெக்டர் ஆதாஷ்
நேற்று ஆய்வு மேற்கொண்டார். முருகாத்தா அரசு உயர்நிலைப் பள்ளியில்
மாணவர்களிடம், வாட்டர் பெல் திட்டம் குறித்தும், குடிநீர் அருந்தும் முறையை
கேட்டறிந்தார்.மேலும், தண்ணீர் அருந்துவதால் பல்வேறு நன்மைகள்
குறித்துமாணவர்களுக்கு விளக்கினார்.ஆய்வின்போது, முதன்மை கல்வி அதிகாரி
அல்லி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Quarterly Exam Questions Answers
- 12th Quarterly Questions & Answers 2026
- 11th Quarterly Questions & Answers 2026
- 10th Quarterly Questions & Answers 2026
- 9th Quarterly Questions & Answers 2026
- 8th Quarterly Questions & Answers 2026
- 7th Quarterly Questions & Answers 2026
- 6th Quarterly Questions & Answers 2026
- Study Materials Download
- 2nd Mid Term Questions
Home »
» பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம் துணை கலெக்டர் திடீர் ஆய்வு







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...