தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குரூப்- 4
உள்ளிட்ட பணிகளுக்கு தற்காலிக சான்றிதழ் சரிபார்ப்புக்கு கல்வி சான்றிதழ்
விவரத்தை பதிவு செய்ய தேர்வர்களை டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தியுள்ளது.
மேலும் டிசம்பர் 5 ஆம் தேதி முதல் டிசம்பர் 18 ஆம் தேதி வரை அரசு இ-சேவை
மையங்களில் சான்றிதழ் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். டிஎன்பிஎஸ்சி
குறிப்பிட்ட அரசு இ- சேவை மையங்கள் மூலம் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில்
சான்றிதழ் விவரங்களை பதிய வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பான
மேலும் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியில் விவரங்களை
தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...