மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்ட அரசுப் பள்ளிகள்
கேந்திரிய வித்யாலயா பள்ளிகள். ஏற்கெனவே இந்தியாவில் 1094 கேந்திர வித்யாலய
பள்ளிகளும், வெளிநாடுகளில் மூன்று பள்ளிகளும் அமைந்துள்ளன.
இந்தப் பள்ளிகள் அனைத்தும் மத்திய அரசுப் பாடத் திட்டத்தின் கீழ்
செயல்பட்டு வருகிறது. பொதுவான பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் முறைகள்
பின்பற்றப்படுவதால் வேறு பள்ளிகளுக்கு மாறினாலும் குழந்தைகளின் கல்வித்
தரம் இதனால் பாதிப்படைவது இல்லை.
நாடு முழுவதும் 50 கேந்திரிய வித்யாலயப் பள்ளிகளை நிறுவப் போவதாக 2019 ஆம்
ஆண்டு மார்ச் 7 ம் தேதி அரசாணை ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது, இந்த 50
பள்ளிகளில் தமிழ்நாட்டில் மட்டும் 4 கேந்திரிய வித்யாலயப் பள்ளிகள்
அமைக்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அமைச்சரவை
கூட்டத்தில் இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அமைய உள்ள 4 பள்ளிகளில் கோவை , மதுரை , சிவகங்கை ,திருப்பூர்
ஆகிய மாவட்டங்களில் அமைய உள்ளதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...