ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை பாடங்களை பயிற்றுவிக்கும்
ஆசிரியர்கள்
தங்களின் கற்பித்தல் விதம் தொடர்பாக சுய மதிப்பீடு செய்து அறிக்கை அளிக்க
கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளி மாணவர்களிடம் தேர்வுகள் நடத்தப்பட்டு
மதிப்பீடு செய்யப்படுவது போன்று ஆசிரியர்களிடமும் சுய மதிப்பீடு மேற்கொள்ள
கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை
பயிற்றுவிக்கின்ற ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் இதில் பங்கேற்க வேண்டும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் சென்று
ஆசிரியர்கள் தங்களின் பெயர், யூசர்நேம் ஆகியவற்றை பதிவு செய்து
‘பெர்பாமன்ஸ் இன்டிகேட்டர்’ பிரிவில் சென்று ஆசிரியர்கள் தாம் கற்பிக்கும்
வகுப்பு மற்றும் பாடத்தை தேர்வு செய்து தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.
மேலும் அதை தொடர்ந்து வரும் மதிப்பீடுகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாட புத்தகம் மற்றும் அது தொடர்புடைய
கற்றல் உபகரணங்களை பயன்படுத்தி கற்பித்தல் மற்றும் கற்றல் பணிகளை
மேற்கொள்ளுதல், கற்பித்தல் கற்றல் செயல்பாட்டில் எல்லா குழந்தைகளையும் ஒரு
சேர ஈடுபடுத்துதல், குழந்தைகள் வகுப்பறை சூழலை ரசிக்கும் வகையில்
கற்றல் செயல்பாடுகள் திட்டமிடுதல், அனைத்து குழந்தைகளாலும்
எதிர்பார்க்கப்படும் வகையில் கற்றல் முடிவு அமையும் வகையில் பாட
குறிப்புகள் தயார் செய்தல், கற்றல் திறன் குறைந்த குழந்தைகள் மீது கவனம்
செலுத்துதல், பாடத்தில் உள்ள உள்ளடக்கத்தை குழந்தைகளுக்கு சரியான
எடுத்துகாட்டுகளுடன் புரிய வைத்தல் உள்ளிட்ட 8 அம்சங்கள் தொடர்பாக
கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டியிருக்கும். இதில் ஒரு கேள்விக்கு நான்கு
விதமான எதிர்பார்ப்புகள் உள்ளன. எதிர்பார்ப்புக்கு கீழ், நெருக்கமாக,
பூர்த்தி செய்தல், மீறுகிறது என்பது ஆகும். இதன் மூலம் ஆசிரியர்களின்
செயல்பாடுகளும் கண்காணிக்கப்பட்டு அதன் அடிப்படையில் மதிப்பீடுகள்
செய்யப்படும் என்றும், தொடர்ந்து மதிப்பீடுகள் குறைவாக இருப்போருக்கு
பயிற்சி அளித்தல், அவர்களை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தல் போன்றவையும்
தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» கற்பித்தல் செயல்பாடுகளை சோதிக்கும் கல்வித்துறை ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு சுயமதிப்பீடு: ஆன்லைனில் கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டும்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...