சென்னை
அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது குறித்து ஆய்வுக்குழு
அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். இந்த ஆய்வு
முடிவதற்குள் அதனை பிரித்து விட்டது போன்று பேசுவது நியாயமாக இருக்காது
என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு
மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்திற்குட்ட பகுதிகளில் ஊரக
உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணிக்கட்சி
வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய
அவர் இதனை தெரிவித்தார். மேலும், பல்வேறு வளர்ச்சித்திட்டங்களால்
பள்ளிக்கல்வித்துறை புதிய வரலாற்றை படைக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...