பெண்
குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பள்ளிகளில் மாணவிகளுக்கு
தற்காப்புப் பயிற்சி கட்டாயமாக அளிக்க வேண்டும் என்று மத்திய மனிதவள
மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துப் பேசிய அவர், பெண் குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் சிறுமிகளுக்கு தற்காப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.
பெண்கள் மத்தியில் தற்காப்பு மற்றும் சுய மேம்பாட்டுக்கான வாழ்க்கைத் திறன் உள்ளிட்டவை மேம்பட வேண்டும்' என்று தெரிவித்தார்.
பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றும் ரமேஷ் போக்ரியால் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...