பத்தாம் வகுப்பு கணித பாடத்துக்கும் அகமதிப்பீடு முறை அமல்படுத்தி, 10 மதிப்பெண் வழங்க, தேர்வுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, புதிய பாடத்திட்டத்தில் அதிக பாடக்கருத்துகள் இடம்பெற்றுள்ளன.உரிய அவகாசத்துக்குள், கருத்துரு, செய்முறை பகுதிகளை நடத்துவதில் சிரமம் நீடிப்பதால், பாடங்களை குறைக்க, ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தேர்வு முறையில் சில மாற்றங்கள் செய்யக்கோரி, இயக்குனரகத்துக்கு, கணித பட்டதாரி ஆசிரியர்கள் கடிதம் அனுப்பி வருகின்றனர். அதில், கணிதத்தேர்வில் 'பகுதி-ஈ', செய்முறை வடிவியல், வரைப்படங்கள் (கிராப்) குறித்து, 10 மதிப்பெண்களுக்கு கேள்விகள் இடம்பெறும். இப்பகுதி, கல்வியில் பின்தங்கிய மாணவர்கள், பாஸ் மார்க் பெற வழிவகை செய்யும்.வினாத்தாள் வடிவமைக்கும்போது, இப்பகுதியில் வேறு வினாக்கள் இடம்பெறாமல் இருக்க, வழிவகை செய்ய வேண்டும். இதுதவிர, பாடங்கள் குறைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
கணிதப்பாடத்தில் உள்ள நடைமுறை சிக்கல்கள், தேர்வுத்துறைக்கு கடிதமாக அனுப்பப்பட்டுள்ளன. மாதாந்திர பாடத்திட்ட அறிக்கை படி, வகுப்பு கையாள வேண்டும். ஆனால், இந்த அறிக்கை வெளியிடுவதில் தாமதம் நீடிக்கிறது. பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, கணிதப்பாடத்தில் அகமதிப்பீடு முறை உள்ளது. பத்தாம் வகுப்புக்கும் 10 மதிப்பெண், அகமதிப்பீடுக்கு ஒதுக்க வேண்டும். அதிக பாடங்கள் உள்ளதால், கணிதத்தில் தேர்ச்சி சதவீதம் சரிகிறது. பாடச்சுமையை குறைக்க வேண்டும்.--கணித பட்டதாரி ஆசிரியர்கள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...