Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TN VII PAY COMMISSION (2009) - நீதியரசர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஊதியக் குறைதீர்க்கும் குழுவில் தனிநபர் & சங்கங்கள் சனவரி 3-ற்குள் மனு அளிக்கலாம்

images%252864%2529

மத்திய அரசின் 6-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைக்கு வந்தபின்னர் அதனடிப்படையில் வெளியான தமிழ்நாடு அரசின் 7-வது ஊதியமாற்றக் குழுவின் பரிந்துரைகள் அனைத்தும் G.O.Ms.No. 71, Finance (Pay Cell) Department, Dated: 26.02.2011 வழியே நடைமுறைக்கு வந்தன.

 இவ்வூதியக்குழு நடைமுறையில் இடைநிலை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைசார் பணியாளர்களின் ஊதியங்களில் குறைபாடுகள் இருந்ததையடுத்து தொடர் போராட்டங்கள் நடைபெற்றன.

அதன் காரணமாக அரசாணை எண் 71-ன் குறைகளைக் களையும் பொருட்டு 10.04.2012-ல் ஒருநபர் குழு அமைக்கப்பட்டது. இதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தி G.O.Ms.No.242 Finance (Pay Cell) Department, Dated: 22.07.2013. வெளியானது.
 இடைநிலை ஆசிரியர்கள் அதற்கு முன்னர் 20 ஆண்டுகளாகப் பெற்று வந்த மத்திய அரசுக்கிணையான ஊதியம் மறுக்கப்பட்டது குறித்து மேற்படி ஒருநபர் குழுவில் முறையிடப்பட்டது.
 எனினும், அக்கோரிக்கைகள் அனைத்தும் நியாயமற்ற காரணங்களை முன்வைத்து நிராகரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்தே இன்று வரை சுமார் 6 ஆண்டுகளாக ஆசிரிய இயக்கங்கள் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
 இது ஒருபுறமிருக்க, பல்வேறு துறைகளில் அரசாணை எண் 71-ன்படி அறிவிக்கப்பட்ட ஊதியங்களைக் குறைத்து அரசாணை எண் 242 வெளியானது.
எனவே, நிதித்துறை அரசாணை எண்கள் 71/2011 & 242/2013 ஆகியவற்றை எதிர்த்து பல்வேறு தரப்பில் இருந்தும் வழக்குகள் தொடுக்கப்பட்டு தீர்ப்புகள் வெளியாகி மேல்முறையீடும் செய்யப்பட்டது. அவ்வாறு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில் (10029/2017) 28.11.2019 அன்று வெளியான தீர்ப்பில், டெல்லி உயர்நீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதி திரு.த.முருகேசன் அவர்களின் தலைமையில் ஊதியக் குறைதீர்க்கும் குழுவை அமைக்க உத்தரவிடப்பட்டிருந்தது.
இதனடிப்படையில், தமிழ்நாடு அரசு அமைத்துள்ள நீதியரசர்.த.முருகேசன் அவர்களின் தலைமையிலான ஊதியக் குறைதீர்க்கும் குழுவில்,G.O.Ms.No. 71, Finance (Pay Cell) Department, Dated: 26.02.2011 மற்றும் G.O.Ms.No.242 Finance (Pay Cell) Department, Dated: 22.07.2013 ஆகியவற்றால் ஊதியப் பாதிப்பைச் சந்தித்துள்ளோர் தனிநபராகவோ / சங்கமாகவோ

தங்களின் கோரிக்கை மனுக்களை *தலைவர், ஊதியக் குறைதீர்க்கும் குழு, தரைத்தளம், அரசுத் தகவல் தொகுப்பு விவரமைய வளாகம், காந்தி மண்டபம் சாலை, கோட்டூர்புரம், சென்னை - 600025* என்ற முகவரிக்குத் தங்களின் முழு முகவரியுடன் அஞ்சல் வழியே அனுப்பி வைக்க, செய்தி மக்கள் தொடர்பு இயக்ககம் (1470/வரைகலை/2019) வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி முகவரிக்கு அனுப்பப்படும் கடிதங்கள் அனைத்தும் 03.01.2020-ற்குள் கிடைக்கப்பெறுமாறு அனுப்ப வேண்டும். அதன்பின் பெறப்படும் கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

 பெறப்பட்ட கடிதங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு நேரில் விளக்கமளிப்பதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

 4 மாத காலத்திற்குள் இக்குழு அரசிற்கு தனது அறிக்கையை வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தமிழ்நாடு அரசின் 8-வது ஊதியமாற்றக் குழுவின் பரிந்துரைகளில் எழுந்த குறைகளைத் தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட ஒருநபர் குழு தனது அறிக்கையை எப்போது அரசிற்கு வழங்கியது? அதன் மீதான அரசின் முடிவு என்ன? என்பது விடையறியா கேள்வியாகவே தொக்கி நிற்கின்றது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive