10, 12ஆம் வகுப்புகளிலும் தமிழ் வழியில்
படித்திருந்தால் அரசுப்பணியில் முன்னுரிமை வழங்க வழிவகை செய்யும் சீர்திருத்த மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
தமிழக அரசின் 2020-2021ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இதனை தாக்கல் செய்தார்.
தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் பிப்.17ம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற்ற நிலையில் ஒத்திவைக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக கடந்த மார்ச் 9 ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.
வார விடுமுறைக்கு பின்பு இன்று கூடும் சட்டப்பேரவையில் தமிழ்வழிக் கல்வியில் முன்னுரிமை அளிக்கும் சீர்திருத்த மசோதா ஒன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.
அதாவது பட்டப்படிப்பு மட்டுமின்றி 10, 12 ஆம் வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்திருந்தால் அரசுப்பணியில் முன்னுரிமை வழங்க வழிவகை செய்யும் சீர்திருத்த மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...