10ஆம் வகுப்பு - பொதுத்தேர்வு ஒத்திவைப்பு - முதலமைச்சர் அறிவிப்பு.
ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.
Source: Puthiya Thalaimurai TV
ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!!
♦தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
♦மார்ச் 27ம் தேதியில் இருந்து 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.
♦ஆனால் தற்போது கொரோனா அச்சுறுத்தலால் பள்ளிகள், கல்லூரிகள் மார்ச் 31வரை மூடப்பட்டுள்ளன. மேலும் முன்னெச்சரிக்கையாக பல நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.
♦இந்நிலையில் தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
♦பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டுமென்று ஆசிரியர்கள், பெற்றோர்கள் தரப்பில் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில் முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
♦ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகு 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
♦மேலும் 11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் அறிவித்தபடி நடைபெறும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்
Source: Puthiya Thalaimurai TV
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...