தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வி மற்றும் விளையாட் டுத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற் றது. அதன்பின் வெளியிடப்பட்ட புதிய அறிவிப்புகள் விவரம்: நடப்பு கல்வியாண்டில் சிறை கைதிகளுக்கு அடிப்படை எழுத் தறிவு கல்வித்திட்டம் அமல்படுத்தப் பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர் களுக்குஅடுத்ததாக 3-ம் வகுப் புக்கு நிகரான சமநிலை கல்வித் திட்டம் ரூ.20.33 லட்சத்தில் நிறை வேற்றப்படும்.வாசிப்பு பழக்கத்தை ஊக்கு விக்க ஒரே குடும்பத்தில் அதிகபட் சம் 5 உறுப்பினர்கள் பயன்படுத்தும் வகையில் குடும்ப நூலக உறுப்பினர் அட்டை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். அதன்படி குடும்பத்தை சார்ந்த ஒருவர் ரூ.100 செலுத்தி உறுப்பின ராகி ஒரேசமயத்தில் 5 நூல்களை பெறலாம்.
இதேபோல், 10-ம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களில் பெற்றோர் பெயரும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவு செய்து வழங்கப்படும்.அரசுப் பள்ளிகளில் 2, 3-ம் வகுப்புகளில் பயிலும் கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு குறைதீர் கற்றல் பயிற்சி புத்த கங்கள் வழங்கப்பட்டு அவர்களின் கல்வித்திறன்
மேம்படுத்தப்பட உள்ளது. மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எளிய உரை வடிவில் திருக் குறளை அச்சிட்டு அதை அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்படும்.
அதேபோல், பணிக்காலத்தில் இயற்கை எய்தும் நூலக பணியாளர்களுக்கு, இனி நூல் இழப்புக்கான அபராத தொகைமுழுவதும் ரத்து செய்யப்படும்.தேசிய மாணவர் படை மாணவர்கள் பயிற்சிக்காக ரூ.90 லட்சம்மதிப்பில் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையம் அமைக்கப்படும்.
தென்மாவட்டங் களில் உள்ளதேசிய மாணவர் படை மாணவர்கள் விமான பயிற்சி பெற ஏதுவாக மதுரையில் 1.20 கோடியில் விமானப்படை அணி நிறுவப்படும் என்பன உட்பட மொத்தம் 48 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. தென்மாவட்டங்களில் உள்ள தேசிய மாணவர் படை மாணவர்கள் விமான பயிற்சி பெற ஏதுவாக மதுரையில் 1.20 கோடியில் விமானப்படை அணி நிறுவப்படும்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...