இந்த வாரம் ராசிநாதன் செவ்வாயின் பலத்தால் எந்தக் கடினமான சூழ்நிலையையும் சமாளிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும். மருந்து, ரசாயனத் தொழில்களில் லாபம் கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அவசரப்படாமல் நிதானமாகச் செயல்பட வேண்டும். எளிதில் கருத்து வேற்றுமை ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பாதிபதி சுக்கிரன் சுய சாரம் பெற்று ராசியில் இருப்பதால் குடும்பம் தொடர்பில் கவலைகள் மறையும். மனத்தில் ஆன்மிக எண்ணங்கள் ஏற்படும். வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பு இருக்கும். பெண்களுக்கு, நிதானமாகச் செயல்பட வேண்டும். கலைத் துறையினருக்கு, நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு, மனஸ்தாபம் நீங்கும். நண்பர்களிடம் சுமுக உறவுக்கு விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். மாணவர்களுக்கு, எதிலும் அவசரப்படாமல் நிதானமாகச் செயலாற்ற வேண்டும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வியாழன்.
திசைகள்: கிழக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, நீலம்.
எண்கள்: 5, 7, 9.
பரிகாரம்: கந்த சஷ்டி கவசம் சொல்லி முருகனை வணங்கப் பிரச்சினைகள் குறையும்.
ரிஷப ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் மறைந்திருந்தாலும் சுய சாரம் என்பதால் நீண்ட நாட்களாகத் தடைபட்டிருந்த காரியம் முடியும். தொழில், வியாபாரத்தில் வாடிக்கையாளரின் தேவையறிந்து செயல்படுங்கள். உத்தியோகத்தில் துணிச்சலாக வேலைகளைச் செய்து வெற்றிபெறுவார்கள். குடும்பத்தில் கணவன், மனைவிக்குள் கருத்து வேற்றுமை குறைந்து நெருக்கம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பெண்களுக்கு, அதிகம் பேசுவதைத் தவிர்த்துச் செயலில் வேகம் காட்டுவது நல்லது. கலைத் துறையினருக்கு, நிலம் சம்பந்தமான காரியங்களில் தடை, தாமதம் ஏற்படலாம். அரசியல்வாதிகளுக்கு, சிலர் வீட்டை விட்டு வெளியில் சென்று தங்குவீர்கள். மாணவர்களுக்கு, கல்வியில் முன்னேற்றமடைவதற்குக் கூடுதல் கவனத்துடன் படிப்பீர்கள். ஆசிரியர், சக மாணவர் மத்தியில் மதிப்பு உண்டாகும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி.
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: மஞ்சள், வெண்மை.
எண்கள்: 4, 6, 9.
பரிகாரம்: லக்ஷ்மி அஷ்டோத்திரம் பாராயணம் செய்து வர பணத் தட்டுப்பாடு நீங்கும்.
மிதுன ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிநாதன் புதன், பாக்கிய ஸ்தானத்தில் மிக அனுகூலமாகச் சஞ்சரிக்கிறார். அனுபவம், திறமை கொண்டு வேலைகளைச் சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். கணவன் மனைவிக்குள் மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளின் கல்விக் கடனுக்கான முயற்சிகளில் முன்னேற்றம் இருக்கும். பெண்களுக்கு, வீண்வாக்குவாதத்தை விட்டு நிதானமாகப் பேச வேண்டும். கலைத் துறையினருக்கு, மனத்தில் தெம்பு அதிகரிக்கும். புதிய வேலைகளில் இறங்குவீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு, வீண் விவாதத்தைத் தவிர்க்க வேண்டும். மேலிடத்தில் நீங்கள் சொல்வதைக் கேட்டு நடக்கவில்லையே என்ற எண்ணம் ஏற்பட்டு நீங்கும். மாணவர்களுக்கு, கல்வியில் வெற்றிபெறுவதற்குக் கூடுதல் உழைப்பு தேவைப்படும். எதிர்பார்ப்புகளைக் குறைத்து இருப்பதைக் கொண்டு சாதிக்க முயலவேண்டும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி.
திசைகள்: மேற்கு, வடக்கு.
நிறங்கள்: பச்சை, நீலம்.
எண்கள்: 1, 5, 8.
பரிகாரம்: புதன்கிழமையன்று நவக்கிரகத்தில் புதனை நெய்தீபம் ஏற்றி வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.
கடக ராசி வாசகர்களே
இந்த வாரம் பணவரவு திருப்திகரமாக இருக்கும். சாமர்த்தியமான பேச்சால் காரியங்களைச் சாதிப்பீர்கள். ராசியைச் செவ்வாய் பார்ப்பதால் சுணங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் பிடிக்கும். தொழில், வியாபாரத்தில் வேகம் இருக்கும். சுணக்க நிலை மாறும். குடும்ப ஸ்தானத்தைச் சூரியன், புதன் பார்க்கிறார்கள்.
குடும்பத்தினருடன் நிதானமாகப் பேசுவது அமைதியைத் தரும். நண்பர்கள், உறவினர்கள் விலகிச் செல்வது போல் இருக்கும். விட்டுப் பிடியுங்கள். குழந்தைகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள். பெண்களுக்கு, எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். கலைத் துறையினருக்கு, தொழில் மிகச் சிறப்பாக இருக்கும். நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும். அரசியல்வாதிகளுக்கு, மற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்குத் தயங்க மாட்டீர்கள். மாணவர்களுக்கு, எதையும் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசித்துச் செய்ய வேண்டும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி.
திசைகள்: கிழக்கு, தென்மேற்கு.
நிறங்கள்: மஞ்சள், பச்சை.
எண்கள்: 2, 6, 7.
பரிகாரம்: அம்மனுக்கு பூஜை செய்து விரதம் இருப்பது கஷ்டங்களைப் போக்கும்.
சிம்ம ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிநாதன் சூரியன் அஷ்டம ஸ்தானத்துக்கு மாற்றம் பெறுகிறார். அவரின் சாரபலத்தால் எண்ணிய காரியம் கைகூடும். புதிய தொழில் தொடங்கலாம். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் வாக்குவாதங்கள் அகலும். வேலை நிமித்தமாகக் குடும்பத்தை விட்டு வெளியே தங்க நேரிடலாம். சுபச்செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
பெண்களுக்கு, எண்ணிய காரியம் கைகூடும். வீண் அலைச்சல் குறையும். கலைத் துறையினருக்கு, சிக்கலான பிரச்சினைகளில் நல்ல முடிவு கிடைக்கும். எதிர்ப்புகள் மறையும். அரசியல்வாதிகளுக்கு, பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். மன உறுதி அதிகரிக்கும். மாணவர்களுக்கு, கல்வியில் கூடுதல் மதிப்பெண் பெற எண்ணுங்கள். அதற்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி.
திசைகள்: கிழக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: சிவப்பு, ஆரஞ்சு.
எண்கள்: 1, 4, 5.
பரிகாரம்: தினசரி கோதுமையைப் பொடித்து காகத்துக்கு வைக்கப் பிரச்சினைகள் குறையும்.
கன்னி ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிநாதன் புதன் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருக்கிறார். தொழில், வியாபாரத்தில் வேகம் குறைந்தாலும் திருப்தி நிலவும். உத்தியோகத்தில் மற்றவர்களின் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவதைத் தவிர்க்க வேண்டும். கணவன், மனைவிக்குள் மோதல் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனமும் அனுசரணையும் தேவை. உறவினர், நண்பர்களுடன் நெருக்கம் ஏற்படும். பெண்களுக்கு, சுயசிந்தனையுடன் செயல்பட வேண்டும். கலைத் துறையினருக்கு, உயர்நிலையில் மனவருத்தம் ஏற்படும்படியான சூழ்நிலை வரும். அரசியல்வாதிகளுக்கு, திறமையான செயல்பாட்டால் பாராட்டுகள் கிடைக்கும். மாணவர்களுக்கு, கல்வியில் கூடுதல் கவனம் தேவை. விளையாட்டுப் போட்டிகளுக்காக வெளி மாநிலம், வெளிநாடு செல்லலாம்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி.
திசைகள்: தெற்கு, தென்மேற்கு.
நிறங்கள்: நிலம், மஞ்சள்.
எண்கள்: 2, 5, 7.
பரிகாரம்: புதன்கிழமையன்று பெருமாளை வணங்கி ஏழைகளுக்குப் புளிசாதம் அன்னதானம் வழங்க மனத்தெளிவு உண்டாகும். அறிவுத் திறன் அதிகரிக்கும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...