கலை பிரிவு மாணவர்கள் காலைவாரிய கணினி பயன்பாடுகள் (computer
Application) கடினத்தேர்வு
தமிழக அரசின் புதிய பாடத்திட்டங்கள் அனைத்தும் ,மாணவர்களுக்கு
பயனுள்ளதாகவும் ,தற்போது
பயன்பாட்டில் உள்ளதாகவும் இருப்பது மகிழ்ச்சியே
ஆனால் இப்புதிய பாடத்திட்டங்கள் குறுகிய காலத்தில் வடிவமைக்கப்பட்டதால்
அச்சுபிழைகளும், தவறுகளும் சற்று நிறையவே இருப்பது மாணவர்களின் கற்றலை
பாதித்து மன உளைச்சலை கொடுத்துள்ளது. 12 ஆம்
வகுப்பு கணினி பயன்பாடுகள் பாடப்புத்தகத்தில் சுமார் 5 பாடங்களுக்கு ,பாடத்தி ன்
பின்பகுதியில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான விடைகள் பாடப்பகுதியில்
இடம்பெறவில்லை. மேலும் ஒரே வினாவிற்கு பாடத்தின் உட்பகுதியில் ஒரு
மாதிரியான விடையும்,கலைச்சொற்கள் பகுதியில் ஒரு விடையும் என இரு மாறுபட்ட
விடைகள் அச்சிடப்பட்டுருந்தன இதில் எந்த விடை சரி என புரிந்து கொள்வதில்
மாணவர்களும் ஆசிரியர்களும் மிகவும் சிரமபட்ட நிலையில் 12.03.2020 அன்று நடந் த
கணினி பயன்பாடுகள் அரசு
பொதுத்தேர்வானது மாணவர்களுக்கு
சிரமத்தையும் மன உளைச்சளையுமே கொடுத்துள்ளது.
முதலாவதாக ஒரு மதிப்பெண்
வினாவே பாடத்தின் பின் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள கலைச்சொற்கள் பகுதியில்
இருந்து கேட்கப்பட்டுள்ளது மேலும் வினா எண் 7 க்கு
இரண்டு விடைகள் பொருந்தக்கூடியது வினா எண் 22 பாடத்தின்
உட்பகுதியில் இடம்பெறவில்லை கலைச்சொற்கள் பகுதியில் மட்டுமே இடம் பெற்றுள்ளது கணினி ஆசிரியர்கள் இல்லாமல் அவதியுறும் சூழலில் இத்தைகைய வினாக்களுக்கு
தவறான விடை அளித்து, தோல்வி அடையும் நிலை உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...