NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பெற்றோர்கள் கவனத்திற்கு - 15 நாள் விடுமுறை நாட்களில் - மாணவர்கள் என்ன செய்யலாம்




ஒருபுறம் தொற்று நோய்  அச்சுறத்தலால் வெளி பழக்கங்கள் மற்றும் அன்றாட சூழல் மாறியுள்ளது மறுபுறம்  பிள்ளைகள் வீட்டில்


*இந்த 15 நாள் விடுமுறை நாட்களில்* *இந்த பிள்ளைகளின் நேரத்தை சரியாக செலவிட உதவுங்கள்* கைபேசி சிறிது நேரம், தொலைகாட்சி சிறிது நேரம்  போக ஆண்(அ)பெண் இருவருக்கும் பொது யோசனைகள் சில....

1. காலை தோப்புக்கரணம் 10 முதல் 20 வரை பொறுமைகாக போட சொல்லுங்கள் 

2.குளியல்  முடிந்ததும் சிறிய தியானம் 20நிமிடம் (அதாவது அவர்களின் நல்ல ஆசைகளை கண்மூடி நினைவு பயணமாக மேற்கொள்ள வேண்டும்) .

3. சிறிய எளிய வீட்டு வேலையை செய்யவிடுங்கள்
சைக்கிள் ,வண்டி  துடைப்பது, அவர்கள் துணிகள், புத்தகங்கள் அடுக்குவது, செடி பராமரிப்பு  .

4.  காலை(அ) மாலை வெயிலில்  சிறிது நேரம் விளையாட வேண்டும்  இதனால் மட்டும் விட்டமின் டி  கிடைக்கும் .

5. சத்தான எளிதில் ஜீரணமாகும் உணவு வகைகள் அளியுங்கள்.

6.நொறுவலுக்கு பழ வகைகள் மற்றும் இஞ்சி சேர்த்த மோர், இளநீர் ,நிலக்கடலை, வறுகடலை, அவல்பொரி வெல்லம், இப்படி தந்து பழகுங்கள். 

7. புத்தக வாசிப்பு, ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல் ,கதைகள் கூறுவது,கோலமிடுவது என அவர்கள்  விரும்புவற்றை செய்ய ஊக்கபடுத்துங்கள்.https://pallikalvitn.blogspot.com/

8.நண்பர்களுடன் சிறிது நேரம் காற்றோட்டமான இடத்தில் விளையாட விடுங்கள். பெண் குழந்தைகள் வாசல் தெளித்து கோலமிடுங்கள். 

9.கை ,கால், முகம், கழுவ பழக்கபடுத்துங்கள், வெதுவெதுப்பான சீரகம் சேர்த்த நீரை அருந்த கொடுக்கவும். சிறிது துளசியை சாப்பிடலாம். 

10. தாயம், பல்லாங்குழி, பம்பரம், பரமபதம், என சிறிய விளையாட்டுகளை கற்று தாருங்கள் .

11. தினமும் 2 மணி நேரமாவது பாடங்களை படிக்க வையுங்கள்  ஏனெனில்  முழு ஆண்டு தேர்வு வரவிருக்கிறது. 

12.வெளியில் செல்லும் முன் சிறிது தேங்காய்(அ) வேப்ப எண்ணெய் தடவி விடவும்.

13.மாலையில் தினமும் சாம்பிராணி போடுங்கள் அதில் சிறிது காய்ந்த வேப்பிலை போடலாம்.
மாலை விளக்கேற்றும் போது வேப்ப எண்ணெய் பயன் படுத்தவும். 

14. பொது இடங்களில் செல்லும் போது கைகுட்டையில்(அ) சட்டை பையில் சிறிது  பச்சைகற்பூரம், துளசி, வேப்பிலை, கற்பூரவல்லி தழை இவைகளில் எது உள்ளதை அதனை வைத்து கொள்ளவும். 

15. இரவு 10 மணிக்கு ரேடியோவில் இனிமையான பாடல் அனைவரும் கேட்க அன்றைய வேலை பளு மறையும்.

*ஏனெனில்  இந்த நேரத்தில் இந்த பதிவு  பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம் மாற்றம் என்பது அனைத்தையும் மாற்றகூடியது நன்றி




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive