Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கொரானா விடுமுறை குறித்து பள்ளிக்கல்வி ஆணையரின் இன்றைய ( 16.03.2029 ) சுற்றறிக்கை!





Screenshot_20200316_222217

Screenshot_20200316_222239

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் செ . கு . எண் : 031 நாள் 16 . 03 . 2020 ல் தமிழகத்திலுள்ள அனைத்து வகைப் அரசு / அரசு உதவி பெறும் மாநகராட்சி / தனியார் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு கொரோனா வைரஸ் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு 17 . 03 . 2020 முதல் 31 . 03 . 2020 வரை விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளார்கள் . எனவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் 17 . 03 . 2020 முதல் 31 . 03 . 2020 வரை விடுமுறை அளிக்க அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது .

அரசுத் தேர்வுகள் 10 முதல் 12ஆம் வகுப்பு வரை ( செயல்முறைத் தேர்வுகள் உட்பட ) திட்டமிட்டபடி நடைபெறும் இத்தேர்வுகள் முடியும்வரை தேர்வு எழுதும் மாணவர்களுக்காக மட்டும் விடுதிகள் மற்றும் உறைவிடப் பள்ளிகள் தொடர்ந்து இயங்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது .

விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு கொரானா வைரஸ் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு சுகாதாரமாக இருக்க அறிவுறுத்துமாறும் மேலும் மாணவர்கள் தங்கள் கைகளை உரிய கிருமிநாசினியை / சோப்பு கொண்டு அவ்வப்போது தூய்மைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்துமாறும் தெரிவிக்கப்படுகிறது .

மேலும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் சுற்றுலாச் செல்ல வாய்ப்பு இருப்பதாகக் கருதி வெளியில் சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றன ) . .

கோயில்கள் தேவாலயங்கள் , மசூதிகள் மற்றும் பிற வழிபாட்டுத் தலங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறும் பெற்றோர்க்கு தெரிவிக்கப்டுகிறது . பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பிற மாநிலங்களுக்கு பயணிப்பதையும் பொது இடங்களில் அதிக அளவில் மக்கள் கூடும் குறிப்பாக வழிப்பாட்டுத் தலங்கள் , கடற்கரை , வணிக மையங்கள் , திருமணங்கள் மற்றும் இதர சமூக விழாக்கள் , விருந்துகள் தவிர்க்குமாறும் , தனி மனித சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்குமாறும் பெற்றோர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் .

மாணவர்கள் வீட்டிற்குள் நுழையும்போது அவ்வப்போது கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவுவதை பெற்றோர்கள் உறுதி செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . கைகளை சுத்தம் செய்யாமால் முகத்தை தொட வேண்டாம் எனவும் தங்கள் குழந்தைகள் விடுமுறை நாட்களின்போது குழுவாக விளையாடதவாறு கண்காணிக்கவும் பெற்றோர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் .

சளி , இருமல் காய்ச்சல் உள்ளவர்கள் அலுவலகம் / பள்ளிக்குச் செல்வதை தவிர்க்கவும் , கொரோனா நோய் அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக அரசு உரிய சோதனை மேற்கொண்டு சிகிச்சை எடுத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள் .

மருத்துவமனையை கொரோனா வைரஸ் சம்பந்தமாக தெரிந்து கொள்ள சுகாதாரத் துறையின் 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை எண்க ள் 104 , 044 - 29510400 , 044 - 29510500 , 9444340496 மற்றும் 8754448477 தெடர்புகொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறது .

மேலும் , இது சார்ந்து எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அனுப்புமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive