விடுமுறையில் உள்ள மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்வி கற்பதற்கான வசதியை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 370 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் கொரோனா தொற்று மேலும் பரவாமல் இருக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அந்த வகையில் பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க நாடு முழுவதும் இன்று ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு வரும் 31 ஆம் தேதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அங்கன்வாடிகளில் படித்து வந்த குழந்தைகளுக்கு மதிய உணவு மற்றும் இணை உணவினை ஆசிரியர்கள் குழந்தைகளின் வீட்டிற்கே கொண்டு சென்று வழங்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் விடுமுறையில் உள்ள மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே, ஆன்லைன் மூலம் பாடங்களை கற்பதற்கு ஏதுவான வசதிகளை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள், diksha.gov.in என்ற இணையதளம் மூலம் பாடத்தினை கற்கலாம் எனவும், இதில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் அந்தந்த மாநில மொழிப்பாடத்தின் கீழ் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...