NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஏன் குழந்தைகளை அடிக்கக்கூடாது முக்கியமான காரணங்கள்

அடிவாங்கும் குழந்தைகள் மன ரீதியாக
பாதிக்கப்படுவார்கள். சில குழந்தைகள் அடியை சாதாரணமாக எடுத்துக்கொள்ளும். பல குழந்தைகள் கற்பனை செய்யும். மன ரீதியாக பாதிக்கும். வெறுப்பை வளர்க்கும். என்னென்னமோ எண்ணங்கள் குழந்தையின் மனதில் தோன்ற ஆரம்பிக்கும். குழப்பத்தில் மூழ்கி போவார்கள். சந்தர்ப்பம் சரியாக இல்லாமல் இருந்தால் இது குற்றத்துக்கான தொடக்கமாக மாறிபோகலாம்.

தூக்கமின்மை, கவனக்குறைவு, எந்த செயலில் ஈடுபட மனம் இல்லாமல் போவது, உள் காயங்கள், தன்னைவிட மற்றவை முக்கியம் தாங்களே நினைத்துக்கொள்வது போன்ற பிரச்னைகள் குழந்தைகளுக்கு வரும். பெற்றோருக்கும் குழந்தைக்குமான நெருக்கம் குறையும். எதிர்மறை எண்ணங்கள், செயல்கள் அதிகரிக்கும்.
டிவி, மொபைல், லாப் டாப் போன்றவற்றில் அதிகம் ஈடுபடும் பிள்ளைகளை அடித்துத் திருத்த முயற்சி செய்தால்… ஒன்றுமே நடக்காது... வேஸ்ட். முதலில் இதையெல்லாம் குழந்தை முன் நீங்கள் செய்துவிட்டீர்கள்… பின், குழந்தையை அடிப்பது நியாயம் ஆகாது. சில ஆய்வுகள் இப்படி சொல்கின்றன. உடல் ரீதியாக துன்பப்படும் குழந்தைகள் பிற்காலத்தில் குற்றவாளிகளாகவும் வன்முறை குணம் நிறைந்தவர்களாகவும் மாறுகின்றனர்.

குழந்தையின் மனதில் அமைதி, அன்பு, பயம் நீங்கி வன்முறை செய்து சாதித்துவிடலாம் எனத் தோன்றும் நினைப்புக்கும் முதல் காரணம் பெற்றோர்களே. அடி வாங்கும் குழந்தைகள், பழி வாங்கும் குணத்தை பெறுவார்கள். வஞ்சத்தால் கோட்டை கட்டுவார்கள். இயல்பற்ற பிள்ளைகளாக மாறிவிடுவார்கள். அடி வாங்கும் குழந்தைகள் தனக்கு நெருக்கமானவர்கள் மீது கோபம், வன்முறை, வஞ்சம் ஆகியவற்றை செலுத்துவார்கள். அடி வாங்கும் குழந்தைகள், தாங்கள் பெற்றோர் ஆனதும் தவறான குழந்தை வளர்ப்பு முறையில் ஈடுபடுவார்கள்.

வன்முறை அவர்களின் வாழ்வியலோடு கலந்துவிடலாம். தன் பலத்தை காட்ட முடியாமல் அடிவாங்கும் பிள்ளைகள் அந்த கோபத்தை எரிச்சலை தன்னைவிட பலம் உள்ளவர்களிடம் செலுத்தும் தூண்டுதலுக்கு ஆளாவார்கள். இது தொடக்கத்தில் சின்ன விஷயமாக இருந்தாலும் பிற்காலத்தில் ஆபத்தாகும். குழந்தைகள் மென்மையான உடல் கொண்டவர்கள். முழுமையான வளர்ச்சியை எட்டி இருக்க மாட்டார்கள். அவர்களை நீங்கள் அடிக்கும்போது தவறுதலாக எலும்பு முறிவு, கை, கால், காது, கண் பாதிப்பு, அழுது அழுது சளி, மூச்சுத்திணறல், வலிப்பு போன்றவை வரலாம்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive