NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கொரோனா வைரஸ்: இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும்?

உலகம் முடங்கிக் கொண்டிருக்கிறது. தினசரி பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த பகுதிகள் எல்லாம், இப்போது பேய்கள் நடமாடும் இடங்களைப் போல மாறிவிட்டன.
மக்களின் இயல்பு வாழ்க்கையில் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாலும், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டதாலும், பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டது முதல் பயணக் கட்டுப்பாடுகள் வரையிலான நடவடிக்கைகளாலும், அதிக எண்ணிக்கையில் பொது இடங்களில் கூடுவதற்குத் தடை விதித்ததாலும் இந்த சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில், இந்த நோய்க்கு எதிராக உலக நாடுகள் போராடி வருகின்றன. ஆனால், இது எப்போது முடிவுக்கு வரும், நமது இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும்?
பிரிட்டனில் இந்தத் தொற்றுநோய் பரவுதலுக்கு எதிரான ``நடவடிக்கைகள்'' அடுத்த 12 வாரங்களில் முடிவுக்கு வந்துவிடும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் இருந்து``கொரோனா வைரஸை பொட்டலம் கட்டி அனுப்பிவிடலாம்'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த மூன்று மாதங்களில், இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்தாலும், எப்போது முழுமையாக சரியாகும்?
இதன் தாக்கம் முழுமையாக மறைவதற்கு நீண்டகாலம் ஆகலாம் - ஆண்டு கணக்கில்கூட ஆகலாம்.
சமூகத்தில் பெரும் பகுதியை முடக்கி வைக்கும் இப்போதைய அணுகுமுறையை நீண்ட காலத்துக்குத் தொடர முடியாது என்பது தெளிவாகத் தெரிந்த விஷயம். சமூக மற்றும் பொருளாதாரப் பாதிப்புகள் பேரழிவு நிலையை ஏற்படுத்தும்.
எல்லா நாடுகளுக்கும் இப்போது இந்தப் பாதிப்பில் இருந்து ``வெளியேறும் நுட்பம்'' தான் தேவைப்படுகிறது. கட்டுப்பாடுகளை நீக்கி, இயல்பு வாழ்க்கையை மீட்பதாக அந்த அணுகுமுறை அமைய வேண்டும் என்பது நாடுகளின் தேவையாக உள்ளது.
ஆனால் இந்த கொரோனா வைரஸ் மறைந்துவிடப் போவதில்லை.
வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக விதித்துள்ள கட்டுப்பாடுகளை நீக்கிவிட்டால், பாதிப்பு எண்ணிக்கைகள் தடுக்க முடியாத அளவில் உயரக்கூடும்.
``வெளியேறுவதற்கான வழிமுறை எது என்பதிலும், இதில் இருந்து எப்படி வெளியேறுவது என்பதும் எங்களுக்கு பெரிய பிரச்னையாக இருக்கிறது'' என்று எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் தொற்று நோய்கள் துறை நிபுணர் பேராசிரியர் மார்க் உல்ஹவுஸ் கூறியுள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive