அரசுத் தேர்வுகள் 10 முதல் 12ஆம் வகுப்பு வரை ( செயல்முறைத் தேர்வுகள்
உட்பட ) திட்டமிட்டபடி நடைபெறும் . இத்தேர்வுகள் முடியும் வரை தேர்வு
எழுதும் , மாணவர்களுக்காக மட்டும் விடுதிகள் மற்றும் உறைவிடப் பள்ளிகள்
தொடர்ந்து இயங்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது .
அரசு பொது தேர்வு எழுதும் 10ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் விடுதிகள் மற்றும் உறைவிடப் பள்ளிகள் தங்கியிருப்பின் அம்மாணவர்களுக்கு மட்டும் விடுதிகள் தொடர்ந்து இயங்க அனுமதியளிக்கப்படுகிறது .
விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு கொரானா வைரஸ் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு சுகாதாரமாக இருக்க அறிவுறுத்தவும் , மேலும் மாணவர்கள் தங்கள் கைகளை உரிய கிருமிநாசினியை சோப்பு கொண்டு அவ்வப்போது தூய்மைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்துமாறும் தெரிவிக்கப்படுகிறது .
பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் நடப்பு கல்வி ஆண்டுக்குரிய தேர்வுப் பணிகள் மற்றும் 2020 - 2021 ஆம் ஆண்டிற்குரிய TLM Preparation , Year Plan Preparation , Time - Table Preparation , DIKSHA App மூலம் QR Code உள்ள பாட விவரங்களை சேகரித்தல் , Activity , do your know - ல் தரப்பட்டுள்ள தகவலுக்குரிய விவரங்கள் இணையத்தலத்திலிருந்து பதிவிறக்கம் செய்து சேகரித்து வைத்தல் , ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்பிற்குரிய மாதிரிகளை உருவாக்குதல் , புதிய மாணவர் சேர்க்கைக்கான ஆயத்தப் பணிகள் போன்ற பணிகளை பள்ளிக்கு வருகைபுரிந்து மேற்காண் பணிகளை மேற்கொள்ள ஆசிரியர்களை அறிவுறுத்துமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...