சீனாவில் தொடங்கி இருபத்து நான்கிற்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தில் நோய்தொற்று பரவாமல் இருப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்துவகை பள்ளிமாணவர்களுக்கும் விழிப்புணர்வினை ஏற்படுத்திட பார்வையில் கண்ட கடிதங்களில் அறிவுரைகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன .
பார்வை 5 இல் காணும் பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகளின் 17 . 03 . 2020 முதல் 31 . 03 . 2020 வரை அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க அனைத்து முதன்மைக் கல்வி அலுவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது . அதன்படி பள்ளிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது . மேலும் பாளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் நடப்புக் கல்வி ஆண்டிற்குரிய தேர்வுப் பணிகளை மேற்கொள்ள பள்ளிக்கு வருகை புரியுமாறு அறிவுறுத்தப்பட்டது .
இதனைத் தொடர்ந்து அன்றாடம் பள்ளிக்கு வருகைதரும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் கொரானோ வைரஸ் தொடர்பான முன்னெச்சரிக்கை மேற்கொண்டு சுகாதாரமாக இருக்கவும் , அவ்வப்போது தங்கள் கைகளை உரிய கிருமி நாசினி / சோப்பு கொண்டு தூய்மைப்படுத்திக் கொள்ளவும் இதற்குத் தேவையான சோப்பு மற்றும் கிருமி நாசினிகள் போன்ற பொருட்களை பள்ளியின் தனி கட்டண நிதி பெற்றோர் ஆசிரியர் கழக நிதி மூலம் வாங்கிக் கொள்ள அறிவுறுத்துமாறு தெரிவிக்கப்படுகிறது .
தற்போது 10 , 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வருவதால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி தேர்வு நடைபெறும் நாளான்று நகராட்சி / மாநகராட்சி மற்றும் பொது சுகாதாரத் துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு தேர்வு அறைகளில் தேர்வு துவங்குவதற்கு முன்பதாக கிருமி நாசினி தெளிக்க ஏற்பாடு செய்திட வேண்டும் .
மேலும் தேர்வு எழுதுவதற்கு முன்னதாக மாணவர்கள் கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினிகள் / Hand Sanitizers மூலம் சுத்தம் செய்துகொள்ளவும் , தேர்வு மைய பள்ளியின் தலைமையாசிரியர் தேர்வு மைய முதன்மை தேர்வு கண்காணிப்பாளர் துறை அலுவலர்கள் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . மேற்குறித்த நடவடிக்கைகள் மேற்கொண்டதற்கான அறிக்கையினை பள்ளிக் கல்வி இணை இயக்குநர் ( நாட்டு நலப்பணித் திட்டம் ) பெயரிட்ட முகவரிக்கு அனுப்பிவைக்க அறிவுறுத்தப்படுகிறது .
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...