இளங்கல்வியியல் பட்டப் படிப்பின்
செய்முறைத் தேர்வின் ஒரு பகுதியான கற்பித்தல் திறன் மதிப்பீடு . ( 10 . 05 . 2020 அன்று மு . ப 9 . 00 மணி முதல் 5 . 00 வரை நடை பெறும் ) தஞ்சாவூர் , மயிலாடுதுறை , தருமபுரி , விருதுநகர் , சென்னை , அரக்கோணம் ஆகிய ஆறு மையங்களில் நடைபெற உள்ளது . மாணவர்கள் தேர்விற்கு வரும்போது கீழ்க்காணும் பதிவேடுகள் மற்றும் கற்பித்தல் கருவிகளை எடுத்துவர வேண்டும் .
1 . பள்ளியில் பயிற்சி மேற்கொண்டபோது தயாரித்த இரண்டு விருப்பப் பாடங்களுக்குரிய பாடத்திட்டப் பதிவேடுகள் ( விருப்பப் பாடம் 1 - 20 பாடத்திட்டம் , விருப்பப் பாடம் 2 - 20 பாடத்திட்டம் )
2 . பள்ளியில் கற்பித்தல் பயிற்சி மேற்கொண்டதற்கான வருகைப் பதிவேடு ( தலைமையாசிரியரின் கையொப்பத்துடன் )
3 . மேற்படி தேர்விற்குக் கற்பித்தல் மதிப்பீட்டிற்கான இரண்டு விருப்பப் பாடங்களுக்குரிய பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் துணைக் கருவிகள் ( விருப்பப் பாடம் 1 மற்றும் 2 இவற்றிக்கு பாடத்திட்டம் அதற்குரியத் துணைக் கருவிகள் )
4 . தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட மாணவர் அடையாள அட்டை . மாணவர்கள் செய்முறைத் தேர்வில் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது .
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...