NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

8-வது தேர்ச்சியா? ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உங்க ஊரிலேயே தமிழக அரசு வேலை!

https://assets-news-bcdn.dailyhunt.in/cmd/resize/400x400_80/fetchdata16/images/a8/5f/40/a85f40a0464dd4a159151e2cc08dca3bd5526d5ad453b44927f5c17340158eb9.jpg

சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வந்தது. இதனிடையே கொரோனா ஊரடங்கின் காரணமாக விண்ணப்பதாரர்களின் நலன் கருதி விண்ணப்பிப்பதற்கான காலநீட்டிப்பு செய்து விண்ணப்பங்கள் 08.06.2020 முதல் 17.06.2020 வரை பிற்பகல் 5.45 மணிக்குள் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - சேலம் (TNRD)

மேலாண்மை : தமிழக அரசு

பணி : ஈப்பு ஓட்டுநர்

கல்வித் தகுதி:

    8-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
    ஐந்து ஆண்டுகளுக்குக் குறையாமல் ஓட்டுநர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

    18-வயது பூர்த்தியடைந்தவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
    அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எஸ்சி, எஸ்.டி பிரிவினர் 40, பிற்படுத்தப்பட்டோர் 30, பொதுப் பிரிவினர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://Salem.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு 17.06.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), அறை எண் - 210, 2-வது தளம், மாவட்ட ஆட்சியரகம், சேலம் - 636001

தேர்வு முறை : குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது https://Salem.nic.in/ எனும் இணையதள பக்கத்தைக் காணவும்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive