Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

10-ஆம் வகுப்பு தனித்தேர்வர்களையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க கல்வித்துறை ஆலோசனை: அறிவிப்பு எப்போது?

1590340110622

பள்ளிகள் வாயிலாக 10ஆம் வகுப்பு தேர்வெழுத விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்களாக அரசு அறிவித்த நிலையில் தனித்தேர்வர்களும் தேர்ச்சி என்ற அறிவிப்பை வெளியிட கல்வித்துறை ஆலோசனை செய்து வருகிறது.

10-ஆம் வகுப்பு தேர்வினை இந்த ஆண்டு தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள  அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை  ஆலோசித்து வருகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா பரவல்  காரணமாக  பள்ளிகளில் பயின்ற  9.75 லட்சம் 10ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்களாக தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில் தனித்தேர்வர்களாக 10ஆம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்களையும் தேர்ச்சி அடையச் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive