NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அஞ்சல் அலுவலகத்தில் உள்ள 9 சேமிப்பு திட்டங்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!

இந்திய தபால் துறையானது வங்கிகள் போன்று பொது மக்களின் சேமிப்புப் பழக்கத்தினை ஊக்குவிக்கப் பல முதலீட்டுத் திட்டங்களை வழங்கி வருகிறது. பொது வருங்கால வைப்பு நிதி திட்டம், மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் என வருமான வரி விலைக்கு அளிக்கக் கூடிய சேமிப்பு

திட்டங்களையும் தபால் அலுவலகங்கள் வழங்கி வருகின்றன. சிறு சேமிப்புத் திட்டங்கள் என்றிழைக்கப்படும் பிபிஎப், மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம், சுகன்யா சம்ரிதி யோஜனா என ப்படும் செல்வ மகள் திட்டம் மற்றம் சில திட்டங்களுக்கு மூன்று மாதத்திற்கு ஒரு முறை என ஒவ்வொரு காலாண்டும் வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்படுகிறது.இந்த வட்டி விகித மாற்றமானது அரசு பத்திரங்கள் மூலமாகக் கிடைக்கும் வருவாயினைப் பொருத்து அளிக்கப்படுகிறது. எனவே தபால் நிலயத்தில் வழங்கப்படும் 9 வகையான சேமிப்புத் திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன் குறித்து விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.

தபால் அலுவலகச் சேமிப்பு கணக்கு தபால் அலுவலகங்களில் வங்கிகள் போன்றே சேமிப்புக் கணக்குகள் உள்ளது. அதுவும் வங்கிகளில் 3.5 சதவீதம் மட்டுமே லாபம் அளிக்கும் நிலையில் தபால் அலுவலகம் 4 சதவீதம் லாபத்தினைத் தனிநபர் மற்றும் ஜாயிண்ட் சேமிப்புக் கணக்குகளுக்கு அளிக்கிறது. குறைந்தபட்ச இருப்புத் தொகை 500 ரூபாய் வைத்துக் கணக்கை துவங்கும் போது செக் புக் மற்றும் டெபிட் கார்டு போன்றவற்றையும் பெற முடியும். சேமிப்புக் கணக்குகளில் பணத்தினை டெபாசிட் செய்ய மற்றும் எடுக்க அருகில் உள்ள தபால் அலுவலகங்கள் மூலமாகச் செய்ய முடியும்.

5 வருட தபால் அலுவலக ரெக்கரிங் டெபாசிட் கணக்குகள் தபால் அலுவலக ரெக்கரிங் டெபாசிட் திட்டம் ஒரு வருடத்திற்கு 7.3 சதவீதம் லாபம் அளிக்கிறது. குறைந்தபட்சம் மாதம் 10 ரூபாய் எனவும் சேமிப்பினை தொடர அனுமதி அளிக்கிறது. ஆனால் வங்கிகளில் குறைந்தபட்சம் 500 ரூபாய் என டெபாசிட் செய்ய வேண்டும். எனவே இது பள்ளி குழந்தைகளுக்குச் சேமிப்புப் பழக்கத்தினைக் கற்றுக்கொடுக்கு ஏற்றதாக இருக்கும்.

போஸ்ட் ஆப்பிஸ் டைம் டெபாசிட் கணக்கு போஸ்ட் ஆப்பிஸ் டைம் டெபாசிட் கணக்கில் ஒவ்வொரு காலாண்டுக்கும் வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது. தற்போது ஒரு வருடம் முதல் 5 வருடம் வரை வட்டி விகிதம் எப்படி அளிக்கப்படுகிறது என்று இங்குப் பார்க்கலாம். 1 வருட கணக்கு: 6.9% 2 வருட கணக்கு: 7.0% 3 வருட கணக்கு: 7.2% 5 வருட கணக்கு: 7.8% அதிகபட்ச டெபாசிட் வரம்பு என்று ஏதுமில்லை. 5 வருட டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் போது பிரிவு 80சி கீழ் வரி விலக்கும் அளிக்கப்படுகிறது.தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்ட கணக்கு தற்போது தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்ட கணக்கிற்கு 7.3 சதவீத வட்டி விகித லாபம் அளிக்கப்படுகிறது. ஒரு கணக்கில் அதிகபட்சம் 4.5 லட்ச்ம் வரை டெபாசிட் செய்யலா. இதுவே ஜாயிண்ட் கணக்கு என்றால் 9 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். ஜாயிண்ட் கணக்கு திறக்கும் போது இருவரும் ஒரே சம நிலையான முதலீட்டினை செய்ய வேண்டும். முதிர்வு காலம் 5 வருடம். ஒரு வருடத்திற்குப் பிறகு தேவைப்பட்டால் முன்கூடியே பணத்தினை எடுத்துக்கொள்ளலாம்.

மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்கள் இந்தத் திட்டத்தில் அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இந்தக் கணக்கினை ஜாயிண்ட் கணக்காகவும் திறக்கலாம். வருமான வரிச் சட்டம் பிரிவு 80சி கீழ் வரி விலக்கும் அளிக்கப்படுகிறது. முதிர்வு கால,ம் 5 வருடம். ஆண்டுக்கு 8.7 சதவீத லாபத்தினை அளிக்கிறது.

பிபிஎப் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு ஆண்டுக்கு 8 சதவீத வட்டி விகித லாபம் அளிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் ஆண்டுக்கு 5,00 ரூபாய் முதல் 1,50,000 ரூபாய் வரை முதலீடு செய்யலாம். மொத்தமாக ல்லது 12 மாத தவணையாகவும் முதலீட்டை ஒவ்வொரு ஆண்டும் செய்ய முடியும். டெபாசிட் தொகைக்கு வருமான வரி செலுத்த வேண்டும் ஆனால் வட்டி வருவாய்க்குச் செலுத்த தேவையில்லை.

5 வருட தேசிய சேமிப்பு பத்திர திட்டம் 5 வருட தேசிய சேமிப்பு பத்திர திட்டம் தற்போது 8 சதவீத வட்டி விகித லாபத்தினை அளிக்கிறது. இன்று 100 ரூபாய் நீங்கள் முதலீடு செய்தால் 5 வருடத்திற்குப் பிறகு உங்களுக்கு 144.23 ரூபாய் கிடைக்கும். அதிகபட்ச வரம்பு என்று ஏதுமில்லை. வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

கிசான் விகாஸ் பத்ரா

கிசான் விகாஸ் பத்ரா திட்டம் ஆண்டுக்கு 7.7 சதவீத வட்டி விகித லாபத்தினை அளித்து வருகிறது. இந்தத் திட்டத்தில் 118 மாதம் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாகக் கிடைக்கும். அதிகபட்ச முதலீட்டு வரம்பு என்றும் ஏதும் கிடையாது. பெரியவர்கள் அல்லது மைனர் என யார் பேரில் வேண்டும் என்றாலும் இந்தத் திட்டத்தில் பத்திரதிட்டத்தினைப் பெற்றுக்கொள்ள முடியும்.சுகன்யா சம்ரிதி யோஜனா பெண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டமாக இந்தச் செல்வ மகள் திட்டம் இருக்கிறது. 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்யத் துவங்கி 15 வருடம் வரை தொடர்ந்து முதலீடு செய்ய முடியும். இந்தத் திட்டத்தில் தற்போது 8.5 சதவீத வட்டி விகித லாபம் அளிக்கப்படுகிறது. முதலீட்டாளர்கள் வரி விலக்கும் பெற முடியும். ஆண்டுக்கு அதிகபட்சம் 1.50 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive