Andriod App Download

பாடசாலை வலைதளத்தின் New Android App ஐ Download செய்து பயன்படுத்தவும்! - https://play.google.com/store/apps/details?id=com.padasalai.padasalai


வாழும் மக்கள் வெவ்வேறு வகையான தொழில்களைச் செய்துகொண்டு வாழ்க்கை நடத்துகின்றனர்.

அவற்றுள் உழுவுதொழிலே உயர்வானது என்பதை நாம் அறிவோம்

ஆசிரியத்தொழிலோ மேலான, புனிதமான, சிறந்த தொழிலாக தொன்றுதொட்டு உலகத்தோரால் போற்றப்பட்டு வருகிறது; பசிப்பிணிக்கு மருந்து கல்வியே உணவு; அறியாமைப்பிணிக்கு மருந்து

இளமையிலேயே கல்வித்துறையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு தனது பல்துறை அறிவாற்றலால் பல பட்டங்களைப்பெற்று, கற்பித்தலில் முதிர்ந்த அனுபவத்தின் வாயிலாகப் பேராசிரியராகத்திகழும் கல்வியாளர் கமலாகந்தசாமி அவர்கள் படிப்படியாக உயர்நிலை அடைந்தவர். தாம் பெற்ற புலமையினாலும் அறிவாற்றலாலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட இலக்கியப்படைப்புக்களை வெளியிட்டுப் புகழ்பெற்றவர். இத்தகு சிறப்புக்களை ஒருசேரப்பெற்ற கமலாகந்தசாமி அவர்கள் “நல்லாசிரியராக திகழ்வது எப்படி என்ற நூலை எழுதியுள்ளார்.

பெற்றோருக்கு அடுத்த நிலையில் போற்றப்படுபவர் ஆசிரியர் எல்லாத்துறையிலும் தேர்ந்து அறிவும் ஆற்றலும் பெற்று மாணவர்களின் ஆற்றலை வளர்ப்பதில் அக்கறை கொண்டவரே நல்லாசிரியர்.

ஒருவர் நல்லாசிரியராக விளங்க, மேலும் மேலும் கற்றல், கற்பிக்கும் பொருளில் தெளிவு, திறமையான கற்பித்தல், பல்துறை அறிவு கதை, கவிதை, நகைச்சுவை - வெளிப்படுத்தும் திறன் போன்ற ஆற்றல்கள் இன்றியமையாதன என்றும் இந்நூல் அறியமுடிகின்றது.

கல்வியின் இன்றியமையாமை குறித்தும் புத்தகங்களின் மேன்மைபற்றியும் பன்னாட்டு அறிஞர்கள் கூறியுள்ள கருத்துக்களை மிகுதியாக ஆசிரியர் மேற்கோள்களாகக் குறிப்பிட்டுள்ளமை ஆசிரியரின் நுண்மாண் நுழைபுலத்திற்குச் சிறந்த சான்றாக அமைகிறது.

உதாரணத்திற்குச் சில; “பெற்ற பிள்ளை கைவிட்டாலும் கற்ற கல்வி கைவிடாது. கல்வி ஆபரணமல்ல, ஆடை."

ம ட்டு ம ல் ல ; வி ய த் த கு மாற்றங்களையும் உண்டு பண்ண வல்லது."

க ா ல ம ன் னு ம் கட்டப்பட்ட கலங்கரை விளக்கங்கள்."

நல்ல புத்தகம் படிப்பது சென்ற நூற்றாண்டின் சிறந்த அறிவாளிகளுடன் பேசுவதற்கு ஒப்பாகும்

இந்நூல், ஆசிரியர்களுக்கு சிறந்த ஒரு வழிகாட்டி நூலாக அமையும் என்பது திண்ணம். ஆசிரியர்கள் இந்நூலில் குறிப்பிடப்பட்ட வழிமுறைகளை ஏற்றுக் கடைப்பிடித்தால் நிச்சயமாக நல்லாசிரியர் என்ற தகுதியைப் பெற்றார். அத்தகையோர் கல்வித்துறையால் அடையாளங்காண பட்டுத் தமிழக அரசின் டாக்டர். இராதாகிருஷ்ணன் விருதையும் பெறக்கூடிய வாய்ப்பும் அவர்களுக்குக்கிட்டும் என்பது உறுதி

பணிபுரியும் ஆசிரியர்களும் பணியேற்கவிருக்கும் ஆசிரியர்களும், பெற்றோர்களும், சான்றோரும், கல்வித்துறையினர் விரும்பிப்படித்துப் போற்றக்கூடியதாக இந்நூல் விளங்குகிறது.

Rs.75.00

அறிவுப் பதிப்பகம்
17/142 ஜானி ஜான் கான் ரோடு இராயப்பேட்டை,
சென்னை - 600 014
தொலைபேசி: 2848 2441

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...

Bot

RWF

Categories

Blog Archive

Total Pageviews

Recent Comments