NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அனைத்து வகை ஆசிரியர்களும் தற்போது அவர்கள் பணிபுரியும் பகுதி அல்லது மாவட்டத்துக்குள் வந்திருக்க வேண்டும் - பொதுத்தேர்வு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறையின் பல்வேறு அறிவுரைகள் CEO வெளியீடு.

Screenshot_20200603_080453
2019-20ஆம் கல்வியாண்டிற்கான இடைநிலை மற்றும் மேல்நிலைப் பொதுத் தேர்வுகள் 2020 ஜூன் -15 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உயர்திரு பள்ளிக்கல்வித்துறை செயலர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற காணொளிக் காட்சி கூட்டங்களில் ஜூன் 2020 - இல் நடைபெறவுள்ள இடைநிலை மற்றும்மேல்நிலைப் பொதுத்தேர்வுகள் தொடர்பாக வழங்கப்பட்ட / தெரிவிக்கப்பட்ட அறிவுரைகள் மற்றும்  அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள நெறிமுறைகள் பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது.
Screenshot_20200603_080538

2020 மேல்நிலை / இடைநிலை பொதுத்தேர்வு நடைபெறுதல் சார்ந்து கொரோனா தொற்று நோய் பாதிப்பு காரணமாக அனைத்துப் பள்ளிகளும் தேர்வு மையங்களாக செயல்பட உள்ளதால் பள்ளி வளாகத்தினை முழுமையாக சுத்தம் செய்த பின்னர் சார்ந்த உள்ளாட்சி / பேரூராட்சி / நகராட்சி / மாநகராட்சி அலுவலர்களைத் தொடர்பு கொண்டு , நோய் தொற்று பரவாமல் இருக்க பள்ளிகளில் கிருமி நாசினி கொண்டு தேர்வறைகள் , மேசைகள் , இருக்கைகள் , சுவர்கள் கைப்பிடிகள் , கதவுகள் , ஜன்னல்கள் , கழிப்பறைகள் மற்றும் மாணவர்கள் / ஆசிரியர்கள் கைப்படக்கூடிய அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி முழுமையாக தெளித்து தூய்மை செய்து வைக்குமாறு அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் , அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள்மற்றும் அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் பின்வரும் அறிவுரைகளைத் தவறாது பின்பற்றி எதிர்வரும் பொதுத்தேர்வுகளை எவ்விதபுகாருக்கும் இடமளிக்கா வண்ணம் செம்மையான முறையில் நடத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பொதுவான அறிவுரைகள்

1. ஜூன் 15 - ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் அனைத்தும் மாணவர்கள் பயின்ற பள்ளியிலேயே நடைபெறும் என்பதால் மாணவர்கள் அவர்தம் பள்ளியிலேயே தேர்வெழுதும் பொருட்டு அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளும் தேர்வு மையமாக செயல்பட தெரிவிக்கப்பட்டுள்ளது .

2 . 10 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அனைத்தும் மாணவர்கள் பயின்ற பள்ளியிலேயே நடைபெறும் என்பதையும் , 10 ஆம் வகுப்பு மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கான திருத்திய கால அட்டவணையையும் தேர்வெழுதும் அனைத்து மாணவர்களுக்கும் தொலைபேசி மூலமாக சார்ந்த பாட ஆசிரியர்களைக் கொண்டு தவறாமல் தகவல் தெரிவிக்குமாறு அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

3.  24.03.2020 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்விற்கு வருகை புரியாத மாணவர்களுக்கு மட்டும்மறு தேர்வு 18.06.2020 அன்று ஏற்கனவே நடைபெற்ற அதே தேர்வு மையத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது . பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பழைய தேர்வு அட்டவணையில்கணக்குப் பாடத்திற்கான தேர்வு இறுதி நாள் தேர்வாக உள்ளது. ஆனால் புதிய தேர்வு கால அட்டவணையில் கணக்குப்பாடத்திற்கானத் தேர்வு , தமிழ் மற்றும் ஆங்கிலத் தேர்வுகளுக்கு அடுத்தபடியாக வருகிறது. இதனை அனைத்து மாணவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் தொடர்ந்து மாணவர்களுக்கு தெரியபடுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.

5 . மாணவர்கள் தேர்வெழுதும் தேர்வறைகளில் சமூக இடைவெளியை பின்பற்றும் நோக்கில் ஒரு தேர்வறைக்கு மாணவர்கள் மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கப்படுவார்கள்.

6. பள்ளிக்கல்வி / தொடக்கக்கல்வி / மெட்ரிக் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் தேர்வுப்பணிக்கு பயன்படுத்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 . அரசு / அரசு நிதியுதவி மற்றும் பகுதி உதவி பெறும் ( தொடக்க , நடுநிலை , உயர்நிலை , மேல்நிலை மற்றும் மெட்ரிக் உட்பட ) பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் வேறு மாவட்டங்களில் தற்போது தங்கி இருப்பின் அவர்கள் தற்போது பணிபுரியும் பள்ளி அல்லது பணிபுரியும் மாவட்டத்திற்குவர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 . பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் தேர்வு நடத்தும் பணி மேற்கொள்ளும் பொருட்டும் , விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்ளவும் தயார் நிலையில் இருக்குமாறு பள்ளித் தலைமையாசிரியர்கள் முதல்வர்களால் அறிவுறுத்தப்பட Cousco Qu.G.O.Ms.No.246 Revenue And Disaster Management ( DM.IT )

9 . and 20.05.2020 - ன்படியும் , மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிக்கை நாள் . 31.05.2020 - ன்படியும் சேலம் , திருப்பூர் , நாமக்கல் , கோவை , நீலகிரி மற்றும் கரூர் இம்மாவட்டங்கள் நீங்கலாக பிற மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்கள் ஆசிரியரல்லா பணியாளர்கள் / மாணவர்கள் இருப்பின் உடனடியாக தங்களின் அடையாள அட்டையைக் காண்பித்து ஈரோடு மாவட்டத்திற்கு வருகை புரிய உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது . விடுதிகளில் தங்கி பயிலும் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் 11.06.2020 அன்று விடுதிக்கு வருகைபுரியும் வண்ணம் தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சார்ந்த பள்ளித்தலைமையாசிரியர்கள் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . விடுதிகள் அனைத்தும் 11.06.2020 - க்கு முன்னர் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளித்து தயார் நிலையில் உள்ளதை உறுதி செய்துகொள்ள வேண்டும் .

10. அனைத்து பள்ளிகளும் தேர்வு மையமாக செயல்பட உள்ளதால் ஏற்கனவே பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு மையங்களாக உள்ள தேர்வு மையங்கள் முதன்மை தேர்வு மையங்களாகவும் , அத்தேர்வு மையத்தில் தேர்வெழுதும் இணைப்பு பள்ளிகள் அனைத்தும் துணை தேர்வு மையங்களாகவும் செயல்பட வேண்டும் .

11. மாணவர்கள் தேர்வெழுதக்கூடிய விடைத்தாட்கள் அனைத்தும் முதன்மைத் தேர்வு மைங்களிலேயே பராமரிக்கப்பட வேண்டும் . ஒவ்வொரு நாள் தேர்வு அன்றும் துணை மையத்திற்கு என நியமிக்கப்பட்ட துறை அலுவலரால் முதன்மை தேர்வு மையத்தில் உள்ள வினாத்தாள் கட்டுகளோடு அன்றைய தேர்வில் மாணவர்கள் பயன்படுத்தக்கூடிய விடைத்தாள் கட்டுகளையும் சரிபார்த்து பெற்றுக்கொள்ள வேண்டும் .

12 . அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் இத்தேர்வுப்பணிக்கு பயன்படுத்தப்படுவார்கள் எனத் தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள் தெரிவித்துள்ளதால் ஆசிரியர்கள் சார்பான விவரங்களை சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலருக்கு தெரியப்படுத்தி தேர்வுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .

13. நோய்க்கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து மாணவர்கள் எவரேனும் தேர்வுக்கு வருகை ( Containment Zone or Area ) புரியும் பட்சத்தில் அவர்களின் வசதிக்காக வட்டாரத்திற்கு இரண்டு சிறப்பு தேர்வு மையங்கள் ( Special Exam Centre ) அமைத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive