Andriod App Download

பாடசாலை வலைதளத்தின் New Android App ஐ Download செய்து பயன்படுத்தவும்! - https://play.google.com/store/apps/details?id=com.padasalai.padasalai

முன்னுரை

வாழ்க்கை என்பதே ஒரு வழக்கு தான்

அதில் மாறி மாறி வரும் இன்பமும் துன்பமும் இரவு, பகல் போல நமக்குள் ஏற்படுத்தும் தாக்கங்கள் பலப்பல! அதனால் தான் ஆன்றோர் பகர்வர் முப்பது வருடம் வாழ்ந்த வனும் இல்லை ', முப்பது வருடம் கெட்ட வனும் இல்லை ' என்று! எத்துணை செறி வார்ந்த சொல்! தொடர்ந்து உனக்குக் கெடுதலோ அன்றி நன்மையோ பெருகி வராது, காலச் சக்கரத்தில் ஏற்படும் சுழற்சி யில் மாறி வரும் கோலங்கள் என்னுமாப் போலே சொல்லி உள்ளனர் அன்றோ

பொருளுரை எப்படி இந்த சுழற்சி நம் வாழ்வெனும் கடலில் நம்மைக் கரை சேர வைக்கிறது?

நீச்சலின் அளவும் அதற்குரிய தைரியம், நீந்திக் கரையேறும் மனோதிடமும் எங்கிருந்து வரு கிறது? அந்நடுக்கடலில் ஏற்படும் சுழல் நடுவே அகப்பட்ட பாய்மரக் கப்பல் போல் தடுமாறித் தவித்துப் பிறகு வெற்றிப் படியை அடைவதும் ப எல்லாப் புதிர்களுக்கும் விடை நமது வினை கர்ப்பம் தான் பிறவி தோறும் தொடர்ந்து வரும் கர்மா களினால்தான் எனவே தான் நாம் பற்றற்று இருந்தால் நல்வினை, தீவினை என்னும் கர்மவினையின் பிடியில் சிக்காமல் இறைவனடி சேரலாம் என்கிறார் வள்ளுவப் பெருமான்! 'பிறவிப் பெருங்கடலில் மாளாமல் இருக்க என்ன வழி இவற்றையெல்லாம் சிந்திப்பவர் மிகச் சிலரே... ஆனால் இவ்வுலக மாயை என்னும் பிடியில் ஆடம்பர வாழ்வில், ஆதிக்க நெறியில் சிக்கி மனிதரை மனிதர் வதைக்கும் குணாதிசயம் கொண்டோர் எண் ணிக்கை நாளும் பெருகி விட்ட காலமிது!

இந்நூற்றாண்டின் காட்சி அதிகாரம் படைத்தவர், பதவி தரும் போதையால் பண்பாடற்ற, மனித நேயமற்ற ஆளும் வர்க்கம் பெருகிவிட்ட கோலம்! பாட்டாளி மக்களைச் சுரண்டி உழைத்துப் பிழைப்போரின் வயிற்றில் அடித்து தான் ஏகபோக சுகத்தில், வாழும் கூட்டம் அதிகம், ஆனால் அவர்கள் உணராத உழைப்பு என்பது! தான் வாழப் ஒன்றுதான் பிறர் உழைக்க வேண்டும்; பிறர் உழைப்பின் வியர்வையில் இவன் குளிர் காயச் செல்வான் விடுமுறையைக் கொண்டாட நிலவுக்கும் கூட

ஏய்த்துப் பிழைக்கும் இவனுக்கு உழைப்பின் அர்த்தம் தெரியாது. உழைப்பு இதில் இரண்டாம் எழுத்தை நீக்கினால் மீதமுள்ளது என்ன 'உப்பு.. இதைத் தின்றவன் அதாகப்பட்டது. வியர்வை சிந்தி அவன் என்று பொருள்.. (நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைப்பு என்னும் உப்பை அனுபவித்தவன் (தின்றவன்) தண்ணீர் குடிப்பான். (கண்ணீர்)! ஆம் இவன் இறுதிக் காலத்தில் எத்தனை வசதிகள்) வாய்ப்புகள் அறிவும், நட்பு என எல்லாம் அமைந்தாலும் தாகம் தீர்க்கும், உயிர் காக்கும் நீர் கிடைக்காமல் கண்ணீர் வடிப்பான். அதுவே மிகப் பெரிய கொடுமை. எனவே உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கொடுத்து உழைப்போர் வாழ்வில் ஒளியேற்றுபவன் கண்ணீரின்றி தண்ணீர் தன்மையான நீர் கிடைக்கப்பெற்று உயிர் எய்துவான் என்னும் பொருளைச் சுட்டிக் காட்டுகிறது அன்றோ

முடிவுரை

உண்மையான நீர் கிடைக்கப்

எதையும் ஆராய்ந்து அறியாமல் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்னும் போக்கில் இப்பழமொழி வெறும் நகைச் சுவை நேரத்தில் இடம் பெறும் தொடராக மாறி விட்டதுதான் வேதனை! உப்பு தின்னவன் தண்ணீர் குடிப்பான் (அ) கண்ணீர் வடிப்பான் எது சரி விட்டிடு வேன் உங்கள் சிந்தனைக்கே! சிந்திப்பீர்! உழைப்பின் பயனை உவந்தளிப்பீர்

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...

Bot

RWF

Categories

Blog Archive

Total Pageviews

Recent Comments