++ தமிழகத்தில் அக்டோபர் 5-ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு திட்டம்? ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
தமிழகத்தில் பள்ளிகளை திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளில் பாடம் நடத்த கடும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி கொடுப்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.

மத்திய அரசின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப தமிழகத்தில் ஊரடங்கை முழுவதுமாக தளர்த்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன. பொது போக்குவரத்து துவங்கியுள்ளது. வழிபாட்டு தலங்களில் மக்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு மைதானங்கள் திறக்கப்பட்டு உள்ளன.தொற்று பரவல் காரணமாக பள்ளிகள், கல்லுாரிகள் திறப்பு மட்டும் தள்ளிப் போடப்பட்டு வந்தது. தற்போது பள்ளிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் பணி துவங்கியுள்ளது.

முதற்கட்டமாக 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு பகுதி நேரமாக பள்ளிகளில் வகுப்பு நடத்தலாம் அல்லது பாடங்களுக்கு விளக்கம் தரலாம் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

செப்டம்பர் 21-ம் தேதியில் இருந்து 9 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்ல அனுமதிக்கலாம் என்றும் அதற்கான கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

அக்டோபர் 5 முதல் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு பகுதி நேரமாக வகுப்புகளை துவங்க தமிழக பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளி கல்வி இயக்குநரகம் மற்றும் கமிஷனரக அதிகாரிகள் வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை தயார் செய்து வருகின்றனர்.

சமூக இடைவெளியை பின்பற்றி மாணவர்களை அமர வைக்கவும் முகக் கவசம் அணிவதுடன் கைகளை சோப்பால் கழுவி சுத்தம் செய்யவும் பள்ளிகளில் ஏற்பாடு செய்யப்படும்.

ஆய்வகங்களில் செய்முறை பயிற்சி மேற்கொள்ளும்போது இடைவெளி கடைப்பிடிப்பது குறித்தும் விரிவான வழிகாட்டுதல் நெறிமுறைகள் தயாராகின்றன.

இந்த வழிகாட்டு முறைகள் தயாரானதும் முதல்வரிடம் ஒப்புதல் பெற்று சுகாதாரத் துறை அனுமதியுடன் மாணவர்களை வகுப்புகளுக்கு அனுமதிக்க பள்ளி கல்வி துறை முடிவு செய்துள்ளதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.

காலாண்டு விடுமுறை

பள்ளிகளில் வகுப்பே துவங்காத நிலையில் காலாண்டு விடுமுறையை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளி கல்வி கமிஷனர் சிஜி தாமஸ் வைத்யன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கொரோனா நோய் தொற்றால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலால் தமிழக பள்ளிகளில் 'ஆன்லைன்' வகுப்புகள் நடக்கின்றன.

ஜூலை 29 முதல் ஆன்லைன் வகுப்புகளுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதை அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டும்.ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தின் தாக்கத்தை குறைக்கும் வகையில் பள்ளி கல்வி துறையின் வழிகாட்டுதல்களை அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டும்.

ஆன்லைன் வகுப்புகளில் வருகைப் பதிவு மாணவர்களின் செயல்திறன் மதிப்பீடு கூடாது.பள்ளிகளை மீண்டும் திறக்கும் போது ஆன்லைன் வகுப்புக்கு வராத மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்க வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பரில் பள்ளிகளில் காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அறிவிப்பது நடைமுறை.

அதன்படி இந்த ஆண்டு செப்டம்பர் 21-ம் தேதி முதல் 25 வரையில் காலாண்டு விடுமுறை அறிவிக்க அரசு உத்தேசித்துள்ளது.

எனவே மேற்கண்ட நாட்களில் அனைத்து வகை பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் நடக்காது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஈரோட்டில் பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி:

செப்டம்பர் 21 முதல் ஐந்து நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடக்காது. அந்த நாட்கள் காலாண்டு விடுமுறை. மாணவர்கள் மகிழ்ச்சியாக இருக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா தொற்று சூழல் மாறிய பின் பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மாணவர்கள் தயார்

நாடு முழுவதும் அனைத்து வகை பணிகளும் துவங்கியுள்ளன. தொழில், வணிகம், போக்குவரத்து, சுற்றுலா என அனைத்து துறைகளும் சுறுசுறுப்பு அடைந்துள்ளன. வீடுகளில் முடங்கி கிடந்த மக்கள் வெளியே வர துவங்கியுள்ளனர்.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...