அரியர்ஸ்
விவகாரம் தொடர்பாக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE)
அனுப்பியதாக ஊடகங்களில் வெளியான மின்னஞ்சல் போலியானது என அண்ணா பல்கலைக்கழக
துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.
தமது
தரப்பில் இருந்து எந்த மின்னஞ்சலையும் வெளியிடவில்லை என அண்ணா
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா விளக்கமளித்துள்ளார். மின்னஞ்சலை
பொதுவெளியில் வெளியிட வேண்டிய அவசியம் தமக்கு இல்லை என்றும் துணைவேந்தர்
சூரப்பா தெரிவித்துள்ளார்.
இந்த
நிலையில், மின்னஞ்சல் விவகாரம் குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின்
துணைவேந்தர் சூரப்பாவிடம் விளக்கம் கேட்கப்படும் என உயர்கல்வித்துறை
அமைச்சர் கே.பி.அன்பழகன் நியூஸ் 7 தமிழுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
மின்னஞ்சல் விவகாரத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளதாகவும், துணைவேந்தர்
சூரப்பாவிடம் விளக்கம் கேட்ட பின்னர், அடுத்தகட்ட நடவடிக்கை
மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார். அகில இந்திய தொழில்நுட்ப கல்வி
கவுன்சிலில் (AICTE) இருந்து அரசுக்கு எந்த மின்னஞ்சலும் வரவில்லை என
உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மீண்டும் திட்டவட்டமாக
தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...