புவனேஸ்வரி தனது மரணத்திற்கான காரணம் குறித்து கைப்பட எழுதிய டைரியை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
காரைக்குடி அருகே காட்டுப்பகுதியில் அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தந்தை பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் காண்டீபன். இவர் தீயணைப்பு துறையில் வேலை பார்த்து வருகிறார். காண்டீபன் மனைவி 32 வயதான புவனேஸ்வரி. இந்த தம்பதிக்கு ஒரு மகன்.
புவனேஸ்வரி தேவகோட்டை அருகே உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். மேலும் தேவகோட்டையில் சொந்தமாக நடனப் பள்ளி ஒன்றையும் நடத்தி வந்தார். செவ்வாய்க்கிழமை இவருடைய செல்போனில் உள்ள வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் இதுவரை எனக்கு ஒத்துழைப்பு வழங்கிய எல்லோருக்கும் நன்றி, நான் இனி யாருக்கும் பாரமாக இருக்க போவதில்லை என்று வைத்து இருந்தார்.
இதைப்பார்த்த புவனேஸ்வரியிடம் நடனம் பயின்று வரும் மாணவி ஒருவர் ஆசிரியைக்கு தொடர்பு கொண்டுள்ளார். அவர் போனை எடுக்காததால், புவனேஸ்வரியின் கணவரிடம் இதை மாணவி கூறியுள்ளார். இதனையடுத்து கணவர் காண்டீபன் மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். செல் போனை எடுக்காததாலும், வெகுநேரமாக வீட்டுக்கு வராததாலும் காண்டிபன் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் மனைவியை காணவில்லை என்று புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் ஆசிரியை புவனேஸ்வரியின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளனர்.
ஆனால் செல்போன் ஒலித்துக்கொண்டே இருந்தது. போனை யாரும் எடுக்காததால் சந்தேகம் அடைந்த போலீசார், செல்போன் இருக்கும் இடத்தை டவர் மூலம் கண்டறிந்தனர். பின்னர் அப்பகுதிக்கு சென்ற போலீசார் புவனேஸ்வரியை தேடினார். காரைக்குடி திருச்சி பைபாஸ் சாலையில் புவனேஸ்வரியின் இருசக்கர வாகனம் நின்றதை கண்டனர்.
காவல் துணை கண்காணிப்பாளர் அருண் தலைமையிலான போலீசார் சாலையின் இருபுறமும் உள்ள காட்டுப்பகுதியில் தேடினர். அங்கு இருந்த ஒரு மரத்தில் புவனேஸ்வரி தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்தனர். அந்த இடத்தில் ஆய்வு செய்தபோது,ற்கொலை செய்ய முடிவெடுத்த ஆசிரியை முதலில் சுகர் மாத்திரைகளை உட்கொண்டுள்ளார்.
அதில் சாகாததால், கை நரம்பை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அதிலும் சாகாததால் கடைசியாக தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து புவனேஸ்வரி உடலை மீட்டு காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
புவனேஸ்வரி தனது மரணத்திற்கான காரணம் குறித்து கைப்பட எழுதிய டைரியை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதில் வாட்ஸ்ஆப்பில் வைத்திருந்த ஸ்டேட்ஸையே எழுதி வைத்துள்ளார். தான் யாருக்கும் பாரமாக இருக்க விருப்பமில்லை என்றும்? யாரும் தனது மரணத்திற்கு காரணம் இல்லை என்றும் எழுதியுள்ளார். இதை அடுத்து சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணையை தொடங்கி உள்ளனர்.
வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்த அவர் பன்முக திறமையாளராக இருந்துள்ளார். திடீரென யாருக்கும் பாரமாக இருக்க விருப்பமில்லை என்கூறி தற்கொலை செய்து கொண்டதால், அது குறித்து விசாரித்து வருகின்றனர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...