இந்நிலையில், பெங்களூரு தேசிய சட்ட பல்கலை நிர்வாகம், 'மாணவர் சேர்க்கைக்கு, 'என்லட்' எனப்படும், தேசிய சட்ட தகுதி தேர்வு நடத்தப்படும்' என, தடாலடியாக அறிவித்தது. அத்துடன், 'கிளாட் தேர்வு எழுதினாலும், அதன் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறாது' எனவும் தெரிவித்தது. இதை எதிர்த்து, பெங்களூரு தேசிய சட்ட பல்கலை முன்னாள் துணை வேந்தர், வெங்கட ராவ் மற்றும் ஒரு மாணவரின் பெற்றோர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை
விசாரணைக்கு ஏற்ற, உச்ச நீதிமன்றம், பெங்களூரு தேசிய சட்ட பல்கலை நடத்தும்,
என்லட் தேர்வு எழுத மாணவர்களை அனுமதித்தது. அதேசமயம், மனுவை விசாரித்து
தீர்ப்பு கூறும் வரை, தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்தது. அதன்படி,
கடந்த, 12ம் தேதி, 'ஆன்லைன்' வாயிலாக என்லட் தேர்வு நடந்தது. நேற்று,
இத்தேர்வு செல்லாது என, உச்ச நீதிமன்ற நீதிபதி, அசோக் பூஷன் தலைமையிலான
அமர்வு, அதிரடியாக உத்தரவிட்டது.தீர்ப்பில்
கூறியிருப்பதாவது:பெங்களூரு தேசிய சட்ட பல்கலை திடீரென தனியே என்லட் தேர்வு
நடத்துவதாக அறிவித்தது சட்ட விரோதமானது. இந்த அறிவிப்பு, சட்டக் கல்வி
பயிலும் ஆசையில் உள்ள ஏராளமான மாணவர்களிடையே அச்சத்தையும், குழப்பத்தையும்
ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், சட்டப் பல்கலைகளின் ஒருங்கிணைந்த
செயல்பாடுகளுக்கு குந்தகம் விளைவித்துள்ளது. பெங்களூரு தேசிய சட்ட
பல்கலையின் இந்த விசித்திரமான போக்கால், மாணவர்கள் கடுமையான மன
அழுத்தத்திற்கு ஆளாயினர். எனவே, தன்னிச்சையாக நடத்திய என்லட் தேர்வு
செல்லாது. இவ்வாறு, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.இதனால், என்லட் தேர்வெழுதிய
மாணவர்கள், மீண்டும் கிளாட் தேர்வு எழுதும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...