++ கல்வியை கேலி பொருளாக்குவதா? பல்கலை பாதுகாப்பு குழு கண்டனம்! ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
ஆன்லைன் தேர்வு என்ற பெயரில், கல்வியை கேலி பொருளாக மாற்றி இருக்கும் பல்கலைகளின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது' என, மதுரை காமராஜ் பல்கலை பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது.

அக்குழு தலைவர் சீனிவாசன் தெரிவித்து உள்ளதாவது:இறுதியாண்டு, 'ஆன்லைன்' தேர்வு களை எழுத, கல்லுாரிகளுக்கு, மதுரை காமராஜ் பல்கலை வழிகாட்டுதலை தெரிவித்துள்ளது.அதில், 'மாணவர்களுக்கு மெயில் மற்றும், 'வாட்ஸ் ஆப்'பில் வினாத்தாள் அனுப்பி, அவர்கள் வீட்டில் இருந்தே, ஒரு மணி நேரத்தில் தேர்வு எழுத வேண்டும். 'அவர்கள் காப்பி அடிக்காமல், நேர்மையாக எழுதினர் என, பெற்றோர் கையொப்பம் இட வேண்டும்.

இணையவசதி இல்லாத மாணவர் விடைத்தாளை, தபால் மூலம் தேர்வு அதிகாரிக்கு அனுப்ப வேண்டும்' என தெரிவித்துள்ளது.இது என்ன முறை. கல்வியை இவ்வளவு மோசமான ஒரு கேலி பொருளாக மாற்றலாமா. ஒருபுறம் நீட் தேர்வுகள், கடும் கண்காணிப்புடன், பல லட்சம் பேர் பங்கேற்க, நடந்துள்ளது.

கல்லுாரி இறுதித் தேர்வை, அவரவர் வீட்டில் இருந்தே எழுதி அனுப்பலாம் என்பதா. இது, உயர்கல்வியை கேவலமாக்கும் செயல். மாணவர் எதிர்காலம் பாதிக்கும் இந்த முறையை கைவிட வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...