++ நீட்’ தேர்வு எப்படி இருந்தது? மாணவ-மாணவிகள் கருத்து. ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
1600044688362
நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வு பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடந்து முடிந்தது. தேர்வை மாணவ-மாணவிகள் மிகவும் ஆர்வமுடன் வந்து எழுதினர்.

இந்தநிலையில் நீட் தேர்வு எப்படி இருந்தது?, தேர்வை எழுதிய மாணவர்களின் மனநிலை எப்படி இருந்தது?, கொரோனா கட்டுப்பாடுகளான முகக்கவசம், கையுறை அணிந்து தேர்வு எழுதியது எவ்வாறு இருந்தது? என்பது குறித்து மாணவ-மாணவிகள் கூறிய கருத்துகள் வருமாறு:-

ஆவடியை சேர்ந்த லட்சுமி:-

2-வது ஆண்டாக நீட் தேர்வை எழுதி இருக்கிறேன். இந்த முறை சிறப்பாக எழுதியுள்ளேன். வேதியியல் மற்றும் உயிரியல் பாடப் பிரிவுகளில் இருந்து கேட்கப்பட்ட அனைத்து வினாக்களும் மிகவும் எளிதாகவே இருந்தன. இயற்பியல் பாடப்பிரிவில் இருந்து கேட்கப்பட்ட வினாக்கள் தான் சற்று கடினமாக இருந்தது. அந்த வினாக்களை எழுதி முடிப்பதற்கு நேரம் போதிய அளவில் கிடைக்கவில்லை. கொரோனாவால் முகக்கவசம், கையுறை அணிந்து தேர்வு எழுதியதில் எந்த மாற்றமும் இல்லை. தேர்வு அறையில் 2 முறை முகக்கவசத்தை அகற்றிக்கொள்ள வாய்ப்பு வழங்கி இருந்தார்கள். எனவே எந்த வித்தியாசமும் தெரியவில்லை.

500-க்கு மேல் மதிப்பெண்


கடலூர் மாவட்டம் வேப்பூரை சேர்ந்த செல்லையாபிள்ளை:-

உயிரியல் வினாக்கள் ரொம்ப எளிதாக இருந்தது. அதில் நேரடி வினாக்கள் அதிகம் கேட்கப்பட்டு இருந்தன. இயற்பியல் எப்போதும் போலவே கடினமாக கேட்டு இருந்தார்கள். அந்த வினாக்களுக்கு பதில் அளிக்க நேரமும் போதவில்லை. மற்றபடி வினாக்கள் எளிதாகவே இருந்தது. இந்த தேர்வில் பல மாணவர்கள் 500-க்கு மேல் மதிப்பெண் எடுப்பார்கள் என்று நினைக்கிறேன். அதில் நானும் ஒருவன். மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

இயற்பியல் வினாக்கள் கடினம்

சென்னை அம்பத்தூரை சேர்ந்த கவிமஞ்சு:-

நீட் தேர்வை 2-வது முறையாக எழுதுகிறேன். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த தடவை நன்றாக எழுதி இருக்கிறேன். இந்த ஆண்டு நீட் தேர்வு வினாத்தாளை பொறுத்தவரையில் உயிரியல் வினாக்கள் அனைத்தும் எளிதாகவே கேட்கப்பட்டு இருந்தது. வழக்கம்போல இயற்பியல் தேர்வு வினாக்கள் கடினமாகவே கேட்கப்பட்டு இருந்தன. மொத்தத்தில் வினாக்களை பொறுத்தவரையில் சற்று கடினமாக இருந்தது. எனக்கு 500-க்கும் மேல் மதிப்பெண் வரும் என்று எதிர்பார்க்கிறேன். கொரோனா காரணமாக முகக்கவசம் அணிந்து தேர்வு எழுதியதில் எந்த தடையும் எனக்கு இல்லை. நன்றாகவே தேர்வை எழுதி முடித்தேன்.

ஆவடியை சேர்ந்த ஜெயவர்ஷினி:-

மொத்தத்தில் தேர்வு சற்று கடினமாக இருந்தது. உயிரியல் பாடப்பிரிவை பொறுத்தவரையில் வினாக்கள் எளிதாக இருந்தன. வேதியியல் மற்றும் இயற்பியல் வினாக்கள் சற்று கடினமாக கேட்கப்பட்டு இருந்தன.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...