++ கொரோனா - நமக்கான உண்மையான சவாலே இனிதான் துவங்கப்போகிறது. ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

ஈ-பாஸ் ரத்து என்பதோ ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு இல்லை என்பதோ அத்தனை மகிழ்ச்சி தரும் செய்தியல்ல.

தளர்வு என்பது மக்களுக்குதானே தவிர கொரோனாவுக்கு அல்ல.

கட்டுப்பாடுகள் பொதுமுடக்கம் போன்றவை அமலில் இருக்கும்போதே நாளுக்கு நாள் நோய் பாதிப்பு எண்ணிக்கையும் அதை விட  கவலை அளிக்கும் விஷயமாக இறப்பு எண்ணைக்கையும் அதிகரித்த வண்ணம்தான் இருக்கிறதே அது குறைந்தபாடில்லை.

கொரோனாவுக்காக இறந்தவர்களின் செய்தி நமக்கு வேண்டுமானால் அது கடந்து செல்லும் ஒரு சாதாரண செய்தியாக மட்டும் இருக்கலாம்.ஆனால் அந்த நோய்க்காக தங்களின் அன்புக்குரியவர்களை இழந்தர்வர்களுக்கே அந்த வலியும் வேதனையும் தெரியும்.

வாழ வேண்டிய இளம் வயதில்  கொரோனாவின் கோரத் தாண்டவத்திற்கு தங்கள் பிள்ளைகளை பறிகொடுத்த கல்யாணம் செய்ய வேண்டிய வயதில் தங்கள் பிள்ளைக்கு காரியம் செய்துவிட்டு நிற்கும் பெற்றோர்களுக்குதான் அந்த வேதனையின் கொடூரம் தெரியும்.

நம் மனம் கவர்ந்தவர்கள் பிரபலங்கள் உள்ளிட்ட எத்தனை பேரை நாம் இழந்திருக்கிறோம் என்பதை நாம் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.எனவே அத்தகைய இழப்பும் வலியும் நமக்கு ஒருபோதும் வேண்டாம்.

கொரோனாவுக்கான தடுப்பூசி முழு அளவில் பயன்பாட்டுக்கு வரும்வரை நமக்கான அச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

எனவே தளர்வுகள் இல்லையே என்பதற்க்காக கண் போன போக்கில் கால் போன போக்கில் செல்ல வேண்டாம்.

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் தேவையற்ற அனாவசியமான பயணங்களையோ பொது இடங்களில் கூடுவதோ கூட்டங்களில் செல்வதை தவிர்ப்பதோ நலம்.குறிப்பாக 50 வயதை கடந்தவர்கள் முற்றிலும் தவிர்ப்பது நலம்.

எனவே அவசியமான விஷயங்கள் தவிர அனாவசியமான விஷயங்களுக்கு வெளியில் செல்வதை தொடர்ந்து தவிர்ப்போம்.

இன்னும் சொல்லப்போனால் நமக்கான உண்மையான சவாலே இனிதான் துவங்கப்போகிறது.
இதுவரை நாம் இழந்தது எல்லாம் போதும்.அந்த வலியும் வேதனையும் இனி ஒருபோதும் நமக்கு வேண்டாம்.இனி இருப்பவர்களையாவது நாம் பாதுகாப்போம்.

முகக்கவசம் தனிநபர் இடைவெளி போன்றவற்றை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டியதும் அவசியம்.

Stay Safe Be Safe...

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...