NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாற்றுத்திறனாளிகளை கவனிக்கும் அரசு ஊழியர்களுக்கு பணி இடமாற்றத்தில் விலக்கு: தமிழக அரசு அறிவிப்பு

 பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை செயலாளர் சுவர்னா நேற்று வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: ஏ, பி, சி பிரிவில் உள்ள அரசு பணியாளர்கள் ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றினால் அவர்களுக்கு பொதுவாக இடமாற்றம் அளிக்கப்படுகிறது. ஆனால் மனநலன் பாதிக்கப்பட்ட அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளை கொண்ட அரசு ஊழியர்கள், ஒரே இடத்தில் 3 ஆண்டுகளாக பணியாற்றி இருக்கும்பட்சத்தில், 3 ஆண்டு முடிவதற்குள் தனது இடமாற்றம் தொடர்பாக அரசுக்கு கோரிக்கை விடுக்கலாம். இதுபோன்ற காரணங்களுக்காக 5 ஆண்டுகள் வரை அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட மாட்டார்.
இந்நிலையில் 2018ம் ஆண்டு அக்டோபரில் மத்திய அரசு கடிதம் அனுப்பியது. அதில், மாற்றுத்திறனாளிகள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குறைபாடுகளை கொண்ட மகள், மகன், பெற்றோர், வாழ்க்கை துணை, சகோதரர், சகோதரி (இதில் எவராவது ஒருவர்) அரசு ஊழியரை சார்ந்திருக்கும்பட்சத்தில், அவர்களை கவனித்து வரும் அந்த அரசு ஊழியரை, நிர்வாக வசதிக்காக வழக்கமான இடமாற்றம் அல்லது சுழற்சி இடமாற்றம் செய்வதில் இருந்து விலக்கு அளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து மே 31ம் தேதிக்குள் இடமாற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன.
மேற்கூறப்பட்ட மாற்றுத்திறன் கொண்ட உறவினரை கவனித்து வரும் அரசு ஊழியருக்கு இதுபோன்ற இடமாற்றத்தில் இருந்து நிபந்தனையுடன் விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிடுகிறது. கவனித்து வரும் அந்த உறவினர், 2016ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் சட்டத்தின் கீழ் குறைபாடுகளை கொண்டவராக அளிக்கப்பட்ட சான்றிதழை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive