++ அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைதூர சட்டப்படிப்பு கல்வியை எதிர்த்து வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதில் தர ஐகோர்ட் உத்தரவு ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
தொலை தூர கல்வி மூலம் அண்ணாமலை பல்கலைக்கழகம் சட்ட படிப்புகள் வழங்குவதை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகம், தொலைதூர கல்வி மூலம் மூன்று ஆண்டு மற்றும் இரண்டு ஆண்டு சட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்று விளம்பரம் வெளியிட்டுள்ளது. இந்திய பார் கவுன்சில் அங்கீகாரம் இல்லாமல் சட்டப்படிப்புகளை தொலைதூர கல்வி மூலம் நடத்துவது தொடர்பான விளம்பரத்தை ரத்து செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்க கோரியும், ராம்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், விதிமுறைகளுக்கு முரணாக இதற்கு முன் இந்த படிப்புகளை முடித்தவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டங்களை திரும்பப் பெற வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த 2008ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டக் கல்வி விதிகளின்படி, தொலைதூர கல்வி மூலம் சட்டப்படிப்புகளை முடித்தவர்கள், வக்கீல்களாக பதிவு செய்ய முடியாது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு 2 வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கும், அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கும் உத்தரவிட்டனர்.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...