++ ஏழை மாணவர்களுக்கான இடங்கள் கால அட்டவணை வெளியிட உத்தரவு ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
கல்வி பெறும் உரிமை சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் ஒதுக்கப்படும், 25 சதவீத இடங்களுக்கான கால அட்டவணையை, மீண்டும் வெளியிடும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
'பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா' அமைப்பின் மாநில செயலர், முகமது ரசின் தாக்கல் செய்த மனு:கல்வி பெறும் உரிமை சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில், ஏழை எளிய, விளிம்பு நிலை மாணவர்களுக்கு, 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். இந்த ஒதுக்கீட்டுக்கான மாணவர்கள் சேர்க்கை, ஆண்டு தோறும் ஏப்ரலில் துவங்கும்.தற்போது, கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், பள்ளிகள் மூடப்பட்டுள்ளன; எப்போது திறக்கப்படும் என, தெரியவில்லை. தனியார் பள்ளிகளில், ஏழை மாணவர்களுக்கான, 25 சதவீத இடங்கள் எப்படி நிரப்பப்படும் என்பது பற்றி, தமிழக அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
எனவே, 25 சதவீத இடங்களை நிரப்புவதற்கான நடைமுறைகளையும், கால அட்டவணை யையும் வெளியிட, அரசுக்கு உத்தரவிட வேண்டும். பொது மக்களுக்கு தெரியும் வகையில், விளம்பரப்படுத்த வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. 'கல்வி பெறும் உரிமை சட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் இடங்களுக்கு, ஆக., 27 முதல் செப்., 25 வரை விண்ணப்பிக்கலாம்' என, கால அட்டவணை வெளியிட்டிருப்பதாக, பள்ளி கல்வித்துறை சார்பில் ஆஜரான சிறப்பு பிளீடர் முனுசாமி தெரிவித்தார். அதற்கு, மனுதாரர் தரப்பில், அரசின் அறிவிப்பு மக்களிடம் சேரவில்லை என, பதில் அளிக்கப்பட்டது.இதையடுத்து, தமிழக அரசின் கால அட்டவணையை, தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் வெளியிடவும், மாணவர்கள் சேர்க்கையை கண்காணிக்கும் குழுவின் அதிகாரிகள் குறித்த விபரங்களை வெளியிடவும், அரசுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.கல்வி பெறும் உரிமை சட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் இடங்களில், வேறு மாணவர்களை சேர்க்கக் கூடாது; நிரப்பப்படாத இடங்களின் விபரங்களை, பள்ளிகள் வாரியாக வெளியிடவும், நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...