கரோனா தொற்றால் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் டிசம்பர் மாதம் வரை திறக்கப்படாது என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக
பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: தன்னார்வ அடிப்படையில்தான் 9
முதல் 12-ம் வகுப்பு வரையான பள்ளிகளை திறக்க மத்திய அரசு
அறிவுறுத்தியுள்ளது. அதன்படி முதல்கட்டமாக பொதுத்தேர்வு எழுதவுள்ள 10, 11,
12-ம் வகுப்புமாணவர்களுக்கு மட்டும் அக்டோபர் முதல் சுழற்சி முறையில்
வகுப்புகளைத் தொடங்க திட்டமிட்டு வருகிறோம். இந்த விவகாரத்தில் முதல்வரின்
அறிவுறுத்தலின்படி இறுதி முடிவெடுக்கப்படும்.
அதேநேரம்
பள்ளிக்கல்வி நிபுணர் குழு வழங்கிய பரிந்துரையின்படி மழலையர், தொடக்கப்
பள்ளிகள் டிசம்பர் வரை திறக்கப்படாது. தொற்று தீவிரம் தணிந்தபிறகே
குழந்தைகள் பள்ளிகளுக்கு வர அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...