இதேபோன்ற தேர்வு திட்டத்தை, மேலும், ஆறு பல்கலைகள் அறிவித்து உள்ளன.சென்னை பல்கலையின், இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள், வரும், 21ம் தேதி துவங்க உள்ளன. தேர்வு குறித்து சென்னை பல்கலை வெளியிட்ட வழிமுறைகள்:கடந்த, 2019 - 20ம் கல்வியாண்டில், இறுதியாண்டு படித்த மாணவர்கள் மட்டும், கடைசி செமஸ்டர் தேர்வை, வீட்டில் இருந்தே எழுதலாம்.
90 நிமிடங்கள்
தேர்வு, 90 நிமிடங்கள்நடக்கும். தேர்வு நடத்தப்படும் இணையதள முகவரி, தேர்வுக்கான பொறுப்பு அதிகாரிகளின் விபரங்கள் போன்றவை, மாணவர்களின் மொபைல்போன் எண் மற்றும், 'வாட்ஸ் ஆப்' எண்ணிற்கு அனுப்பப்படும்.இணையதளத்தில் வினாத்தாள் வழங்கப் படும். காலை, 9:30 முதல், 11:30 மணி வரையிலும், பகல், 1:30 முதல், 3:30 மணி வரையும் தேர்வு நடத்தப்படும்.இதில், காலை, 10:00 முதல், 11:30 மணி வரை மட்டும் தேர்வு எழுத அனுமதிக்கப் படும். அதேபோல், 2:00 முதல், 3:30 மணி வரை மட்டுமே, தேர்வு எழுத அனுமதிக்கப்படும்.
மாணவர்கள், 'ஏ - 4' வடிவ காகிதத்தில், 18 பக்கங்களுக்கு அதிகமாகாமல் தேர்வு எழுத வேண்டும். அதில், முகப்பு பக்கத்தில், மாணவர்களின் பெயர், வகுப்பு, பட்டப்படிப்பு குறியீடு, பதிவெண் போன்ற விபரங்களையும் எழுத வேண்டும்.இந்த தேர்வுக்கான மாதிரி தேர்வு, நாளை மறுநாள் முதல் இரண்டு நாட்களுக்கு நடத்தப்படும்.
விடைத்தாளில் டைப் செய்யவோ, புத்தகத்தின் பக்கங்களை ஒட்டவோ அனுமதி இல்லை. வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்வதற்கு, மாணவர்களுக்கு குறிப்பிட்ட அவகாசம் வழங்கப் படும். அதற்குள் பதிவிறக்கம் செய்து, வாட்ஸ் ஆப் மற்றும் மொபைல்போனில், எஸ்.எம்.எஸ்., வழியே பதிவிறக்கம் செய்த விபரத்தை தெரிவிக்க வேண்டும்.
விடைத்தாளின் ஒவ்வொரு பக்கத்திலும், கையெழுத்திட வேண்டும். பின், விடைத்தாளின் ஒவ்வொரு பக்கத்தையும் ஸ்கேன் செய்து, பல்கலையின் இணையதளத்தில், 'லாக் இன்' செய்து, பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த பணிகளை, தேர்வு முடிந்த மூன்று மணி நேரத்துக்குள் முடிக்க வேண்டும்.ஒரு முறை பதிவேற்றிய விடைத்தாள்களில் மாற்றம் செய்ய முடியாது. இணைய பிரச்னையால் பதிவேற்ற முடியாவிட்டால், அதற்கு குறிப்பிட்ட அவகாசம் தனியாக வழங்கப்படும்.
பதிவேற்றியதும், அதற்கான ஒப்புகை சீட்டு வழங்கப்படும். உடனடியாக தேர்வு பொறுப்பு அதிகாரிகளுக்கு, விடைத்தாள் பதிவேற்றம் செய்ததை தெரிவிக்க வேண்டும்.இணையதளத்தில் விடைத்தாள்களை பதிவேற்ற முடியாதவர்கள், கல்லுாரி முதல்வருக்கு, விரைவு தபாலில் துணி இழையால் செய்யப்பட்ட உறையில் வைத்து, விடைத்தாள்களை அனுப்ப வேண்டும்.
மூன்று மணி நேரத்துக்குள் அதை அனுப்பி, அதன் பதிவு எண்ணை, தேர்வு பொறுப்பாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.கொள்குறி வினாக்கள்இதேபோன்ற தேர்வு முறையை, அண்ணாமலை பல்கலை, பாரதியார், பாரதி தாசன், மனோன்மணியம்சுந்தரனார் பல்கலை,ஆசிரியர் கல்வியியல்பல்கலை, மதுரை காமராஜர் பல்கலை ஆகிய, ஆறு பல்கலைகள் அறிவித்துள்ளன
திருவள்ளுவர் பல்கலை, தனியாக ஆன்லைன் வழி நேரடி தேர்வை நேற்றே துவங்கி விட்டது. பெரியார் பல்கலை தேர்வு அட்டவணையை மட்டும் வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலை ஆன்லைன் தேர்வை, முதல் முதலாக அறிவித்து, நேரடியாக ஆன்லைன் வழி கொள்குறி வினாக்கள் உடைய தேர்வாக நடத்துகிறது.'புத்தகத்தை பார்த்து எழுதக்கூடாது; ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் கூட்டாக சேர்ந்து எழுதக்கூடாது; காப்பி அடிக்க கூடாது' என்பது போன்ற அறிவிப்புகளை, சென்னை பல்கலை உள்ளிட்ட ஆன்லைன் எழுத்து தேர்வு நடத்தும் பல்கலைகள் வெளியிடவில்லை.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...