அரியர் தேர்வு விவகாரத்தில்
தமிழக அரசு ஏ.ஐ.சி.டி.இ.-யிடம் எந்த வித விளக்கத்தையும் அளிக்கப்படவில்லை
என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் உறுதிபட
விளக்கமளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தற்போதும்
இருப்பதால் ஏற்கனவே தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. அதாவது இறுதியாண்டு
தேர்வுகள் தவிர மற்ற தேர்வுகள் அனைத்து ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு
அறிவித்திருந்தது. குறிப்பாக இதில், பல்கலைக்கழக மானிய குழு மற்றும் அகில
இந்திய தொழிநுட்ப கவுன்சில் ஏற்கனவே அறிவித்துள்ள விதிகளின்படியே
மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தது.
அதேவேளையில்
அரியர் மாணவர்களும் தேர்ச்சி என தமிழக முதல்வர் ஏற்கவே அறிவித்திருந்தார்.
இதற்கிடையில், தேர்வு கட்டணம் செலுத்திய அரியர் மாணவர்கள் அனைவரும்
தேர்ச்சி என உயர்கல்வித்துறை அமைச்சரும் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது
அதற்கு தொடர் சிக்கல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இதுதொடர்பாக ஏ.ஐ.சி.டி.இ
தரப்பிலிருந்து பொறியியல் படிப்பில் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க முடியாது
என்று ஏற்கனவே ஒரு கடிதமானது கொடுக்கப்பட்டிருந்தது. அந்த கடிதம் நேற்றைய
தினம் அரசுக்கு வந்து சேர்ந்ததாக கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில்
தற்போது அரியர் தேர்வினை மீண்டும் நடத்துவதற்கு அரசு தயாராக இருப்பதாக
தமிழக அரசு கூறியதாக ஒரு தகவல் வெளியானதை தொடர்ந்து, இதுகுறித்து
உயர்கல்வித்துறை அமைச்சர் விளக்கமளித்துள்ளார். அதாவது, தற்போது
இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால்,
தமிழக அரசு ஏ.ஐ.சி.டி.இ-யிடம் எந்த ஒரு விளக்கத்தையும் கொடுக்கவில்லை என
உறுதியாக கூறியுள்ளார். மேலும் அரியர் மாணவர்களுக்கு பழைய தேர்வின்
அடிப்படையில், மதிப்பெண் வழங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக உயர்கல்வித்துறை
அமைச்சர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து,
தினந்தோறும் புதுப்புது தகவல்கள் கொடுக்கப்படுவதால் மாணவர்கள் மன
அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படுவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். எனவே
நிலுவையில் உள்ள வழக்கை பற்றி தவறான தகவலை பரப்ப வேண்டாமென அவர்
கேட்டுக்கொண்டுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...