NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.19 முதல் விடுமுறையா? திருப்புதல் தேர்வு நடைபெறுமா?




தமிழகத்தில் தினசரி கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் வரும் ஜனவரி 19ம் தேதி முதல் பள்ளிகளில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு ஆன்லைன் வகுப்புகளை தொடங்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


பள்ளிகள் விடுமுறை:



தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் பரவல் தற்போது வேகமெடுத்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு சார்பில் இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் உள்ளிட்ட தீவிர கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. மறுபுறம் பள்ளி, கல்லூரிகளுக்கு இம்மாதம் இறுதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுத்தேர்வுகளை கருத்தில் கொண்டு 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் கொரோனா 3வது அலை 18 வயதிற்கு உட்பட்டவர்களை அதிகம் தாக்கும் என ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.



இதனால் 10 முதல் 12ம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை ரத்து செய்து விட்டு ஆன்லைன் வகுப்புகளை தொடங்கலாம் என உயர் நீதிமன்றமும் அறிவுறுத்தி உள்ளது. பெற்றோர்கள், சமூக ஆர்வலர்களின் கோரிக்கையும் இதுவாகவே உள்ளது. மாணவர்களும் தினசரி அச்சத்துடன் பள்ளிகளுக்கு சென்று வருவதை காண முடிகிறது.



தற்போது பொங்கல் பண்டிகை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள நிலையில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அதனை நீட்டிக்க பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதற்கிடையில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு இன்னும் சில நாட்களில் திருப்புதல் தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கான ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.




14 Comments:

  1. Please close the schools I am suffering from fever I am unable to study for exam 😫 😭 😪 🙃 😢 there is nobody for us my frnd lso suffering bcoz we put the vaccine

    ReplyDelete
  2. அரசு ஊழியர்களுக்கு குறிப்பாக ஆசிரியர்களுக்கு சம்பளம் இல்லை என்று சொல்லுங்கள் மாணவர்களின் கல்வி பாதிக்காத அளவிற்கு ஊரடங்கு நடக்கும் ஓசியில் சொகுசாக சம்பளம் வாங்கிக்கொண்டு வெட்டியாக இருக்கும் அரசு ஆசிரியர்கள் இதற்கு பின்னால் இருந்து மூளைச்சலவை செய்கிறார்கள்

    ReplyDelete
  3. ஊரடங்கு தேவையில்லை மாணவர்கள் பொதுத் தேர்வை எழுதாமல் போகும் சூழ்நிலை ஏற்பட்டால் மாநில அரசின் கல்வி உரிமை முழுக்க மத்திய அரசின் கையில் சென்றுவிடும் அனைத்து விதமான கல்லூரிகளுக்கும் எழுத்துத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு கல்வி உரிமை மாநில அரசு கையை விட்டுப் போய்விடும்

    ReplyDelete
    Replies
    1. 18 வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவியர்களுக்கு கொரோனா பெருந்தோற்று வேகமாக பரவி வருவதால் மாணவர்களுக்கு தற்போது விடுமுறை அளித்து ஊரடங்கு போடுவதே சிறந்தது ஏதேனும் உயிர் சேதம் ஏற்பட்டால் அதன் தாக்கத்தை பிள்ளைகளை பெற்ற பெற்றோர்களுக்கே வந்துசேரும் பெற்றோர்கள் மிகுந்த அவல நிலைக்கு உள்ளாவார்கள் எனவே தற்போது பொங்கல் பண்டிகையை விடுமுறையை தொடர்ந்து இந்த மாதம் இறுதி வரை விடுமுறை அளிப்பதே சிறந்தது

      Delete
  4. அரசு ஆசிரியர் சங்கம் உங்களுக்கு கோரிக்கை என் வீட்டு குழந்தைகள் அரசு பள்ளியில்தான் படிக்கிறார்கள் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் தற்போது வரை அரசு நிர்ணயம் செய்த அளவிற்கு கூட நீங்கள் பாடம் படிக்காமல் வெட்டியாக வந்துவிட்டு தான் சொல்கிறீர்கள் நாள்தோறும் பக்கத்தை நடத்தினால் கூட தற்பொழுது வாரம் மூன்று நாள் கிடைக்கும் வகுப்பில் குறைந்தது ஆறு பாடங்கள் வரை நடத்தி இருக்க முடியும் ஆனால் நடத்தியிருப்பது இரண்டு படங்கள் மட்டுமே கையில்லாத அரசாங்கம் மற்றும் அதிகாரிகள்

    ReplyDelete
    Replies
    1. Aama unna mathiri yosikiravan than venum. Nee election la ninnu athikarathuku vanthu ellam mathu....

      Delete
  5. யார் சொன்னது பெற்றோர்கள் பிள்ளைகளை ஆன்லைனில் படிக்கலாம் என்று.
    தயவுசெய்து பள்ளிகளை மூடி தமிழகத்தை
    முட்டாள்கள் வாழும் நாடு என ஆக்கிவிடாதீர்கள்

    இது ஒரு நல்ல அரசாக இருந்தால்
    கடுமையான கட்டுப்பாடுகளோடு பள்ளிகளை நடத்தி நாட்டுக்கே முன்னுதாரனமாக இருக்கவைக்கட்டும்!

    ReplyDelete
    Replies
    1. I support your comment

      Delete
    2. ஏதேனும் உயிர் சேதம் ஏற்பட்டால் சமூக வலைதளங்களில் இதனைப் போன்று பதிவு விடுபவர்களுக்கு பிரச்சனை இல்லை பெற்றோர்களே மிகுந்த அவல நிலைக்கு உள்ளாவார்கள் அவர்களையும் நினைத்துப்பார்த்து ஆலோசிப்பது நல்லது

      Delete
    3. நீதிமன்ற அறிவுறுத்தலின்படி தற்போது ஊரடங்கு நீட்டித்து பிறகு பள்ளியை தொடங்குவதே சிறந்தது

      Delete
  6. Don't close school... Open all classes 1 to 12... Online class no use for students. Govt School Teacher

    ReplyDelete
  7. School vaiga ulla na pulliga la mutal agirum plss open the school for11th and 12th student

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive